ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் இந்திய அணியின் துவக்க வீரர் சேவக் 5வது இடத்துக்கு முன்னேறினார். காம்பிர் அபாரம்: மற்றொரு இந்திய துவக்க வீரர் கவுதம் காம்பிர், 877 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இவரை தொடர்ந்து இலங்கையின் மகிலா ஜெயவர்தனா (836 புள்ளி), கேப்டன் சங்ககரா (836 புள்ளி) ஆகியோர் முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர். டிராவிட் முன்னேற்றம்: இலங்கை டெஸ்டில் அசத்திய ராகுல் டிராவிட் (728 புள்ளி) இரண்டு இடங்கள் முன்னேறி 16வது இடம் பிடித்தார். இதேபோல லட்சுமண் (708 புள்ளி) 19வது, சச்சின் (723 புள்ளி) 18வது இடத்துக்கு முன்னேறினர். இந்திய கேப்டன் தோனி (618 புள்ளி) 30வது, யுவராஜ் (490 புள்ளி) 46வது இடத்தில் உள்ளனர். ஜாகிர் "நம்பர்-10': பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ஜாகிர் கான் 10வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ஹர்பஜன் சிங் 6வது இடத்தில் நீடிக்கிறார். இவர்களை தவிர இஷாந்த் சர்மா 25வது, ஸ்ரீசாந்த் 29வது இடத்தில் உள்ளனர். தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (844 புள்ளி), ஜான்சன் (783 புள்ளி), முரளிதரன் (752 புள்ளி) ஆகியோர் "டாப்-3' வரிசையில் உள்ளனர்
ரேங்கிங்: சேவக் "நம்பர்-5'
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சிறந்த டெஸ்ட் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை நேற்று துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்திய வீரர் சேவக் 804 புள்ளிகளுடன் 14 இடங்கள் முன்னேறி, 5வது இடம் பிடித்தார்.
இவர் சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயன் விருது வென்றார். தவிர, முதன்முறையாக இந்திய அணியை ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேற வித்திட்டார். இதன்மூலம் இவர் 5வது இடத்தை பாகிஸ்தான் கேப்டன் முகமது யூசுப்புடன் பகிர்ந்து கொண்டார்.
0 comments:
Post a Comment