பன்றிக்காய்ச்சலில் இருந்து மீண்டார் ஸ்ரீசாந்த்

பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த, முழுமையாக குணமடைய, ஆஸ்பத்திரியில் இருந்து "டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். அதிவிரைவாக வளர்ச்சி கண்ட இவர், களத்தில் ஆவேசமாக போராடுவதில் வல்லவர். அதேநேரம், எதிரணியினரை சீண்டுவதிலும் கெட்டிக்காரர். கடந்த 2008 ஐ.பி.எல்., தொடரில் ஏற்பட்ட பிரச்னையில் ஹர்பஜனிடம் கன்னத்தில் "வாங்கிக்' கட்டிக்கொண்டார். இதையடுத்து "பார்ம்' பிரச்னையால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க நீண்ட காலம் போராடி வந்தார். 19 மாதங்களுக்கு பின் திடீரென இந்திய அணியில் இடம் கிடைத்தது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்ற இவர் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார். "டுவென்டி-20' மற்றும் ஒருநாள் தொடரில் அசத்துவதற்கு காத்திருந்த இவரை பன்றிக்காய்ச்சல் தொற்றியது.


காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று பன்றிக் காய்ச்சல் குணமடைய, ஸ்ரீசாந்த் "டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். இதுகுறித்து போரிட்ஸ் ஆஸ்பத்திரியின் இயக்குனர் ஏ.பானர்ஜி கூறுகையில்,"" ஸ்ரீசாந்துக்கு காய்ச்சல் முற்றிலும் குணமடைந்து விட்டது. தற்போது முழு அளவில் குணமடைந்துள்ளார்,'' என்றார்

0 comments:

Post a Comment