இந்திய அணியின் "சூப்பர் பேட்ஸ்மேனாக' கவுதம் காம்பிர் உருவெடுத்துள்ளார். சமீப காலமாக ரன் மழை பொழியும் இவர், இந்த ஆண்டின் ஐ.சி.சி., சிறந்த டெஸ்ட் வீரர் விருதை தட்டிச் சென்றார். மிக விரைவில் அணியை வழிநடத்திச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.டில்லியை சேர்ந்த அதிரடி வீரர் காம்பிர். இந்த ஆண்டு தூள் கிளப்பிய இவர் 5 டெஸ்ட் போட்டிகளில் 4 சதம், ஒரு அரைசதம் உட்பட 727 ரன்கள்(சராசரி 90.87) எடுத்தார். 27 ஒரு நாள் போட்டிகளில் 2 சதம், 5 அரைசதம் சேர்த்து 848 ரன்கள்(சராசரி 40.38) விளாசினார். தற்போது 28 வயதான இவர், ரஞ்சி டிராபி போட்டிகளில் டில்லி அணியின் கேப்டனாக...