ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான "டுவென்டி-20 உலககோப்பை தொடரில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது.
இலங்கையில் "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. கொழும்புவில் நடக்கும் "சூப்பர்-8 போட்டிகளில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி "பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் துவக்க வீரர் சேவக் இடம் பெறவில்லை. டிண்டா, பாலாஜி நீக்கப்பட்டு அனுபவ ஜாகிர் கான், அஷ்வின் இடம் பெற்றார். முதலில் "பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் விக்கெட்டுக்கு ரன்கள் எடுத்தது.
இந்தியா சார்பில் இர்பான் பதான் அதிக பட்சமாக 31 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணிக்கு கம்மின்ஸ் இரண்டு , வாட்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.
0 comments:
Post a Comment