சாம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 : டிக்கெட் விற்பனை துவக்கம்

தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள, நான்காவது "டுவென்டி-20' சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நேற்று துவங்கியது.

தென் ஆப்ரிக்காவில் அக்., 9 முதல் 28ம் தேதி வரை இத்தொடர் நடக்கவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று இணையதளத்தில் துவங்கியது.

எட்டு அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் (ஐ.பி.எல்.,) முதல் நான்கு இடங்கள் பிடித்த கோல்கட்டா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டில்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேரடியாக தகுதி பெற்றது.

தென் ஆப்ரிக்க சார்பில் டைட்டன்ஸ், ஹைவெல்டு லயன்ஸ். ஆஸ்திரேலியாவில் இருந்து சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்செர்ஸ் அணிகளும் நேரடியாக தகுதி பெற்றன.

இங்கிலாந்தின் ஹாம்ப்ஷையர், யார்க்ஷையர். பாகிஸ்தானின் சியால்காட் ஸ்டாலியன்ஸ். நியூசிலாந்தின் ஆக்லாந்து ஏசஸ், டிரினிடாட் டுபாகோ, இலங்கையின் உவா நெக்ஸ்ட் ஆகிய அணிகள் அக்., 9ம் தேதி துவங்கும் தகுதிப் சுற்றுப் போட்டியில் மோத உள்ளன.

0 comments:

Post a Comment