இந்திய அணி 2011ல் நடந்த 50 ஓவர் உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது அணிந்த அதே ராசியான உடையில் தற்போதைய "டுவென்டி-20' உலக கோப்பை தொடரிலும் களமிறங்க உள்ளனர்.
புதிதாக வடிவமைக்கப்பட்ட "டி-சர்ட்டை' நிராகரித்து விட்டனர். இலங்கையில் நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை, செப்., 18 முதல் அக்., 7 வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கான, புதிய "டி சர்ட்' சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
நீல நிறத்தினால உடையில், இடது புறம் காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறத்திலான தேசிய கோடி போல சேர்க்கப்பட்டுள்ளது.
நடுவில் இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) முத்திரை உள்ளது. இதன் மேல், 1983, 2007, 2011 ல் உலக கோப்பை வென்றதை குறிக்கும் வகையில், தங்க நிறத்தில் மூன்று நட்சத்திரங்கள் இருந்தன.
தோனி விளக்கம்:
அப்போது கேப்டன் தோனி கூறுகையில்,"" வீரர்கள் வெள்ளை நிற ஆடையில் விளையாடுவதை "டிவி'யில் பார்த்தால் அது டெஸ்ட் போட்டி. நீல நிறம் என்றால் ஒருநாள் போட்டி என்று புரிந்து கொள்வோம். தற்போதுள்ள "டி சர்ட்டை' பார்த்தவுடன் "டுவென்டி-20' போட்டி என தெரிந்து கொள்ளும் நிலை ஏற்படும்,'' என்றார்.
மாறியது ஏனோ:
ஆனால், ஒரே மாதத்தில் பி.சி.சி.ஐ., எண்ணம் மாறிவிட்டது. 2011ல் தோனியின் அணி உலக கோப்பை வென்றபோது அணிந்திருந்த சீருடை, இலங்கையிலும் தொடரும் என, பி.சி.சி.ஐ., தெரிவித்து விட்டது. இதனால் தான், சென்னையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில் புதிய "டி சர்ட்டை' அணியவில்லையாம்.
பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" பழைய உடை ராசியானது. இந்திய அணிக்கு மீண்டும் வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம்,''என்றார்.
0 comments:
Post a Comment