உலக கோப்பை டுவென்டி-20: இந்தியா தோல்வி

பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை "டுவென்டி-20 பயிற்சி போட்டியில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இலங்கையில், நான்காவது "டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை துவங்குகிறது. இதற்கு முன், ஒவ்வொரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது இரண்டாவது பயிற்சி போட்டியில், பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இதில் "டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, "பேட்டிங் தேர்வு செய்தார்.

16 பந்துகளில் 10 ரன் எடுத்த காம்பிர் முதலில் அவுட்டானார். அடுத்த ஓவரில் சேவக்கும் (26 ரன்கள், 14 பந்து) கிளம்பினார். ரோகித் சர்மா 56 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. விராத் கோஹ்லி (75), யுவராஜ் சிங் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹபீஸ் (38), இம்ரான் நாசிர் (13) ஓரளவு ரன்கள் சேர்த்தனர். ஜாம்ஷெத், அப்ரிதி, "டக் அவுட்டாகினர்.

கடைசி நேரத்தில் கம்ரான் அக்மல், சோயப் மாலிக் இணைந்து சிக்சர்களாக விளாச, பாகிஸ்தான் அணி, 19.1 ஓவரில் 186 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

0 comments:

Post a Comment