கடன் சுமையில் தவித்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி, இன்று ஏலம் போகவில்லை. கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு துவங்கப்பட்டது.
இதில், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணி இடம் பெற்றது. இதனை அப்போது சுமார் ரூ. 599 கோடிக்கு வாங்கினர்.
2009ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணி, அதற்கு பின் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. பெரும் கடனில் மூழ்க, விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விண்ணப்பங்கள் அனுப்ப இன்று கடைசி நாள். மதியம் 12 மணியுடன் இதற்கான நேரம் முடிந்தது.
ஆந்திராவின் பி.வி.பி., நிறுவனம், ரூ. 900 கோடிக்கு வாங்க முன்வந்தது.
ஆனால், இத்தொகை குறைவாக இருப்பதால், டெக்கான் அணியை விற்க, அந்நிர்வாகம் முன்வரவில்லை.
0 comments:
Post a Comment