ஐ.சி.சி., அணிக்கு கேப்டனாக தோனி தேர்வு

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான உலக லெவன் அணியின் கேப்டனாக இந்தியாவின் தோனி தேர்வு செய்யப்பட்டார். இதில், விராத் கோஹ்லி, காம்பிரும் இடம் பெற்றனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களைக் கொண்டு, 12 பேர் கொண்ட அணியை தேர்வு செய்யும்.

இந்த ஆண்டுக்கான அணியை தேர்வு செய்ய முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாய்டு தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.


இந்தியா ஆதிக்கம்:

இந்த அணியில் அதிகபட்சமாக இந்தியா சார்பில் மூன்று பேர் இடம் பிடித்தனர். அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். இதன்மூலம் இவர், தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான லெவன் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

இவரை தவிர விராத் கோஹ்லி, கவுதம் காம்பிர் ஆகியோருக்கு இடம் கிடைத்தது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து சார்பில் தலா இரண்டு வீரர்களும், தென் ஆப்ரிக்கா சார்பில் ஒரு வீரரும் இடம் பெற்றுள்ளனர்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகளில் இருந்து ஒரு வீரர் கூட தேர்வு செய்யப்படவில்லை. இந்த அணியின் 12வது வீரராக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் இடம் பிடித்தார்.

இந்த ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் போட்டி அணி: தோனி (இந்தியா, கேப்டன் + விக்கெட் கீப்பர்), காம்பிர் (இந்தியா), கோஹ்லி (இந்தியா), அலெஸ்டர் குக் (இங்கிலாந்து), ஸ்டீவன் பின் (இங்கிலாந்து), சங்ககரா (இலங்கை), லசித் மலிங்கா (இலங்கை), அப்ரிதி (பாகிஸ்தான்), சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்), மார்னே மார்கல் (தென் ஆப்ரிக்கா), மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா), ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா, 12வது வீரர்).

0 comments:

Post a Comment