டெக்கான் அணி விற்பனைக்கு - வாங்கப் போவது யாரு?

கடன் சுமையில் தவிக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் அணி விற்பனைக்கு வருகிறது. கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு துவங்கப்பட்டது. இதில், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணி இடம் பெற்றது.

இதனை அப்போது சுமார் ரூ. 599 கோடிக்கு வாங்கினர். 2009ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணி, அதற்கு பின் பெரிய அளவில் சாதிக்கவில்லை.

இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. பெரும் கடனில் மூழ்க, தற்போது விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி டெக்கான் அணியை வாங்கும் புதிய நிறுவனம், அணியை இதே பெயரில் நடத்தலாம். ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இது செயல்படும். புதிய உரிமையாளர், கடன்களை முழுவதும் செலுத்த வேண்டும். வீரர்களுக்கான சம்பள பாக்கியை தர வேண்டும்.

வரும் 13ம் தேதி 12 மணி வரை "டெண்டர்' விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம். அன்றைய தினமே அதிக தொகை குறிப்பிட்ட நிறுவனம் அறிவிக்கப்படும்.

டெக்கான் அணியின் தற்போதைய உரிமையாளர்கள் ரூ. 1500 கோடி வரை எதிர்பார்ப்பதால், பல நிறுவனங்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றன.

வீடியோகான் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ரூ. 700 கோடிக்கு வாங்க முன்வந்துள்ளன. இந்நிறுவனத்தின் புதிய உரிமையாளர் யார் என்பது வரும் 13ம் தேதி தெரியவரும்.

0 comments:

Post a Comment