இந்த வருடத்திற்குள் மீண்டும் நம்பர் ஒன் ஆவதே என் லட்சியம்

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 2010-ம் ஆண்டிலிருந்து முதலிடம் வகித்துவந்த செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.  இந்நிலையில் இந்த வருடத்திற்குள் டென்னிசில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பதே என் லட்சியம் என ஜோகோவிச் கூறியுள்ளார்.   இதுபற்றி பேசிய ஜோகோவிச், ‘அது (முதலிடம் பிடிப்பது) என்னுடைய இலக்குகளில் ஒன்றாகும். அது என்னுடைய லட்சியம் எனலாம்.  இந்த வருட இறுதிக்குள் முதலிடத்தைப் பிடிக்க என்னால்...

மகா யுத்தம் - இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் இன்றைய "சூப்பர்-8' போட்டியில் கிரிக்கெட் அரங்கின் "பரம எதிரிகளான' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.  ஏற்கனவே ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி, இம்முறை கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது.  நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் இலங்கையில் நடக்கிறது. இன்றைய "சூப்பர்-8' போட்டியில் "குரூப் ஆப் டெத்' என்றழைக்கப்படும் பிரிவு-2ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது.  வருவாரா...

ஷேவாக் நீக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா பயம் இல்லாமல் ஆடியது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஷேவாக் நீக்கப்பட்டார். டோனியின் இந்த முடிவை முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-  காம்பீர் சிறந்த தொடக்க வீரர். அவரும், ஷேவாக்கும் இணைந்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி வருவது அனைவருக்கும் தெரியும். இந்த இருவரையும் பிரிப்பது என்ற முடிவு சரியானது அல்ல.  ஷேவாக் எதிர் அணிக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடிய அதிரடி பேட்ஸ்மேன் ஆவார்....

உலக கோப்பை T20 - இந்திய 140 ரன்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான "டுவென்டி-20 உலககோப்பை தொடரில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. இலங்கையில் "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. கொழும்புவில் நடக்கும் "சூப்பர்-8 போட்டிகளில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி "பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் துவக்க வீரர் சேவக் இடம் பெறவில்லை. டிண்டா, பாலாஜி நீக்கப்பட்டு அனுபவ ஜாகிர் கான், அஷ்வின் இடம் பெற்றார். முதலில் "பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் விக்கெட்டுக்கு ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் இர்பான் பதான் அதிக...

இந்தியா-ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை- ஷேவாக் ஆடுகிறார்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் ஆட்டம் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது.  இந்த சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் இ மற்றும் “எப்” என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. “இ” பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளும் “எப்” பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.  இன்று நடைபெறும்...

இந்திய வீரர்கள் தேர்வில் குழப்பம்

டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் "சூப்பர்-8' சுற்றுக்கு இந்திய அணி ஆயத்தமாகிறது. இதில், 7 பேட்ஸ்மேன்கள் "பார்முலாவை' தொடர்வதா அல்லது 5 பவுலர்களுடன் களமிறங்குவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. சேவக்கிற்கு ஏற்பட்டுள்ள காயமும் சிக்கலை அதிகரித்துள்ளது.  நான்காவது உலக கோப்பை "டுவென்டி-20' தொடர் இலங்கையில் நடக்கிறது. லீக் போட்டிகள் முடிந்து இன்று ஓய்வு நாள். நாளை முதல் "சூப்பர்-8' சுற்று போட்டிகள் துவங்குகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில்...

திறமையை நிரூபித்த ஹர்பஜன்

இங்கிலாந்துக்கு எதிராக சுழலில் அசத்திய ஹர்பஜன் சிங் திறமையை நிரூபித்து, தனது தேர்வை நியாயப்படுத்தினார்,'' என, இந்திய கேப்டன் தோனி பாராட்டு தெரிவித்தார். கொழும்புவில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான "ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது.  பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.4 ஓவரில் 80 ரன்களுக்கு சுருண்டு, 90 ரன்கள் வித்தியாசத்தில்...

விஜய் 266 ரன்கள் விளாசல்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் முரளி விஜய் 266 ரன்கள் விளாச, "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி வலுவான நிலையில் உள்ளது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் "நடப்பு' ரஞ்சி கோப்பை சாம்பியன் ராஜஸ்தான், "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் மோதும் இரானி கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.  முதல் இன்னிங்சில் ராஜஸ்தான் 253 ரன்கள் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு...

சொந்த மண்ணில் இலங்கை பரிதாபம்

மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட, இலங்கை அணிக்கு எதிரான "டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் "சூப்பர்' வெற்றி பெற்றது. பவுலிங், பேட்டிங்கில் ஏமாற்றிய இலங்கை, சொந்த மண்ணில் பரிதாபமாக வீழ்ந்தது. நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் இலங்கையில் நடக்கிறது. "சி' பிரிவு கடைசி லீக் போட்டியில் இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. மழையால் போட்டி துவங்குவதில் தாமதம் ஆனது.  பின், தலா 7 ஓவர்கள்...

மெக்கலம் உலக சாதனை! - சூப்பர் சதம் விளாசினார்

வங்கதேசத்துக்கு எதிரான "டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் விஸ்வரூபம் எடுத்தார் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம். 123 ரன்கள் விளாசிய இவர், "டுவென்டி-20' அரங்கில் இரண்டு சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.  தவிர, ஒரே இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். இப்போட்டியில் நியூசிலாந்து அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வங்கதேச அணி ஏமாற்றம் அளித்தது. இலங்கையில் நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை...

எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட்டில் நீடிப்பார் சச்சின்?

டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு சச்சின் நீடிப்பார்,'' என, லாரா கணித்துள்ளார். இந்திய அணியின் "மாஸ்டர்' பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச போட்டிகளில் 100 சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்த இவர், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் "ஹாட்ரிக்' போல்டானார். இதையடுத்து இவர் ஓய்வு பெற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்தது.  இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாரா கூறியது: சச்சின் "டுவென்டி-20' போட்டிகளில்...

டென்னிஸ் சங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடர மகேஷ் பூபதி முடிவு

இந்திய டென்னிஸ் சங்கம் விதித்துள்ள தடையை எதிர்த்து வழக்குத் தொடர டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா ஆகியோர் 2014 ஜூன் வரை இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) தெரிவித்தது. டென்னிஸ் சங்கம் வலியுறுத்திய நிலையிலும் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸýடன் சேர்ந்து விளையாட மாட்டோம் என்று இவர்கள் இருவரும் மறுத்ததே இந்த தடைக்குக் காரணம். இந்நிலையில்...

நான் துரோகியா? - பூபதி ஆவேசம்

எங்களை துரோகியாக சித்தரிக்கின்றனர். இதை ஏற்கமுடியாது, சட்டரீதியாக எதிர் கொள்வேன்,'' என, இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி தெரிவித்தார்.லண்டன் ஒலிம்பிக் டென்னிசில் லியாண்டர் பயசுடன் சேர்ந்து விளையாட மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா மறுத்தனர். இதனால் டேவிஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர். தவிர, வரும் 2014, ஜூன் 30ம் தேதி வரை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து பூபதி கூறியது:அகில இந்திய டென்னிஸ் சங்கம்...

இலங்கையில் உலக கோப்பை டுவென்டி-20 அதிரடி ஆரம்பம்

கண் இமைக்கும் நேரத்தில் காட்சிகள் மாறும் "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதில், ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்கப்படும் அதிசயம் அரங்கேறலாம். மடமடவென விக்கெட்டுகள் சரிவதையும் காணலாம். ஒவ்வொரு போட்டியிலும், கடைசி பந்து வரை "டென்ஷன் எகிறும் என்பதால், உலக ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கலாம். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நான்காவது "டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று முதல் அக்., 7ம் தேதி வரை நடக்கிறது....