2009-ம் ஆண்டு தரவரிசை: காம்பீர் நம்பர்-1

2009-ம் ஆண்டு முடிவில் டெஸ்ட் வீரர்கள் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு உள்ளது.

இதில் இந்திய வீரர் காம்பீர் முதலிடத்தை பிடித்து உள்ளார். அவர் ஏற்கனவே முதலிடத்தில் இருந்து வருகிறார். அந்த இடத்தை தக்கவைத்து உள்ளார்.

இலங்கை வீரர்கள் ஜெயவர்த்தனே 2-வது இடத்தையும், சங்ககரா 3-வது இடத்தையும் பிடித்துள்ளார். ஷேவாக் 4-வது இடத்தில் இருக்கிறார்.

டிராவிட் ஒரு இடம் முன்னேறி 13-வது இடத்தையும், தெண்டுல்கர் ஒரு இடம் சரிந்து 17-வது இடத்தையும், லட்சுமணன் 18-வது இடத்தையும் பிடித்து உள்ளனர்.

பந்து வீச்சாளர்களில் தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன் 2-வது இடத்தில் இருக்கிறார். டாப்-10 வீரர்களில் இந்திய வீரர் ஹர்பஜன்சிங் மட்டுமே இடம் பிடித்து உள்ளார். அவர் 6-வது இடத்தில் இருக்கிறார்.

0 comments:

Post a Comment