ஒரு நாள் கிரிக்கெட் வரிசை டோனி தொடர்ந்து முதலிடம்

பேட்டிங்கில் இந்திய அணி கேப்டன் டோனி 822 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

மற்ற இந்திய வீரர்களில் தெண்டுல்கர் 8-வது இடத்திலும், ஷேவாக் 9-வது இடத்திலும் உள்ளனர். 3 நாடுகள் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுரேஷ் ரெய்னா, வீரட் கோக்லி ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

ரெய்னா 30-வது இடத்தில் இருந்து 20-வது இடத்துக்கும், கோக்லி 26-வது இடத்தில் இருந்து 21-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். யுவராஜ் சிங் 12-வது இடத்திலும், காம்பீர் 19-வது இடத்திலும் உள்ளனர்.

மைக்கேல் ஹஸ்சி (ஆஸ்தி ரேலியா), டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா), பாண்டிங் (ஆஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல், சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்) சுமித் (தென்ஆப்பிரிக்க) ஆகியோர் முறையே 2 முதல் 7-வது இடங்களில் உள்ளனர்.

பந்து வீச்சாளர்களில் நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி 719 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். பிரைஸ் 2-வது இடத்திலும், சாகிப்-அல்-ஹசன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய வீரர்களில் “டாப் 10”ல் ஹர்பஜன்சிங் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அவர் 6-வது இடத்தில் உள்ளார்.


ஆல்ரவுண்டர் தரவரி சையில் யுவராஜ்சிங் 3-வது இடத்தில் உள்ளார்

0 comments:

Post a Comment