வங்கதேசத்துக்கு எதிரான சிட்டகாங்கில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி திணறல் துவக்கம் கண்டுள்ளது. சச்சின், 13 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தார்.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சிட்டகாங், ஜோகர் அகமது சவுத்ரி மைதானத்தில் இன்று நடந்தது. முதுகுவலி காரணமாக தோனி, முதல் டெஸ்டில் பங்கேற்காததால் சேவக், கேப்டன் பொறுப்பை ஏற்றார். "டாஸ்' வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
சேவக் "50':
இந்திய அணிக்கு சேவக், வழக்கம் போல் அதிரடி துவக்கம் தந்தார். ஹுசைனின் ஓவரில் மூன்று பவுண்டரி அடித்து அசத்திய சேவக், டெஸ்ட் அரங்கில் தனது 20வது அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த நிலையில் சேவக், 52 (9 பவுண்டரி) ரன்னுக்கு அவுட்டானார்.
திடீர் சரிவு:
மறுமுனையில் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி துவக்க வீரர் காம்பிர் 23 ரன்களில் வெளியேறினார். அதிக எதிர்பார்ப்புடன் களமிறங்கிய டிராவிட் (4), ஹுசைன் பந்தில் போல்டானார். லட்சுமண் (7), தேவையில்லாமல் "ஸ்டம்டு' ஆகி, ரசிகர்களின் பொறுமையை சோதித்தார்.
யுவராஜ் (12), தினேஷ் கார்த்திக் (0), அமித் மிஸ்ரா (14) மற்றும் ஜாகிர் கான் (11) என யாரும் நிலைக்கவில்லை.
சச்சின் அபாரம்:
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், உ<றுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், 30 ரன்கள் எடுத்த போது சர்வதேச டெஸ்ட் அரங்கில் 13 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்த போது, வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. சச்சின் 76, இஷாந்த் சர்மா ஒரு ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
வங்கதேசம் சார்பில் சகாதத் ஹுசைன், கேப்டன் சாகிப் அல் ஹசன், தலா 4 விக்கெட் வீழ்த்தினர்
0 comments:
Post a Comment