ஐ.பி.எல்., ஏலத்தில் 51 வீரர்கள் பங்கேற்பு: இங்கிலாந்து புறக்கணிப்பு

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் 51 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இங்கிலாந்து அணி வீரர்கள் இப்பட்டியலில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல்., அமைப்பின் சார்பில், மூன்றாவது "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 12 ம் தேதி இந்தியாவில் துவங்குகிறது. இத்தொடருக்கான வீரர்கள் ஏலம், வரும் 19 ம் தேதி மும்பையில் நடக்க உள்ளது. மொத்தம் உள்ள 8 அணிகள் ஏலத்தின் மூலம் வீரர்களை ஒப்பந்தம் செய்ய உள்ளன.


கெய்ன்ஸ் நீக்கம்:

இந்த முறை மொத்தம் 97 பேர் ஐ.பி.எல்., ஏலத்துக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். நியூசிலாந்து வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் இப்பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இருப்பினும் இதற்கு ஐ.பி.எல்., நிர்வாகம் எந்த காரணமும் தெரிவிக்க வில்லை. இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) போட்டிகளில் கெய்ன்ஸ் பங்கேற்றது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.


அதிரடி குறைப்பு:

மீதமுள்ள 96 பேர்களின் பெயர்களை ஐ.பி.எல்., நிர்வாகம் பரிசீலனை செய்தது. வீரர்களின் திறமையை அடிப்படையாகக் கொண்டு 51 பேர் மட்டுமே ஏலத்துக்கு தேர்வாகி உள்ளனர். அதிக பட்சமாக ஆஸ்திரேலியா தரப்பில் 11 வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தென் ஆப்ரிக்கா (9 பேர்), வெஸ்ட் இண்டீஸ் (8 பேர்), இலங்கை (8 பேர்), பாகிஸ்தான் (7 பேர்), நியூசிலாந்து (4 பேர்) வீரர்கள் வழக்கம் போல வாய்ப்பு பெற்றுள்ளனர். வங்கதேசம், கனடா, ஹாலந்து, ஜிம்பாப்வே தரப்பில் தலா ஒரு வீரர் வாய்ப்பு பெற்றுள்ளார்.


இங்கிலாந்து புறக்கணிப்பு:

இங்கிலாந்து தரப்பில் மான்டி பனேசர், டிராட் உள்ளிட்ட 8 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் ஒரு வீரருக்கு கூட வாய்ப்பு கிடைக்க வில்லை. இங்கிலாந்தில் வரும் ஏப். 9 ம் தேதி உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இதே சமயத்தில் இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரும் நடக்கிறது.

இதனால் தான் இங்கிலாந்து வீரர்களுக்கு ஏலத்தில் பங்கேற்கும் வாயப்பு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. தவிர, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு விதித்த புதிய நிபந்தனைகளும், வீரர்கள் புறக்கணிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.


ஐ.பி.எல்., ஏலத்தில் பங்கேற்க உள்ள வீரர்கள்:

ஆஸ்திரேலியா

போலிங்கர், பிராட் ஹாடின், பிலிப் ஹியுஸ், ஆஸ்லே நாப்கே, ஜேசன் கிரஜ்ஜா, பென் லாங்லின், கிரஹாம் மானோ, டேமியன் மார்டின், மெக்கேய், ஆடம் வோகஸ் மற்றும் பீட்டர் சிடில்.

தென் ஆப்ரிக்கா

யூசுப் அப்துல்லா, ஜான்டர்ட் பிரய்ன், கெம்ப், கிளைன்வெல்ட், பார்னெல், பிலேண்டர், லோன்வேபோ, வான்டர் வேத் மற்றும் வான் ஜார்ஸ்வெல்ட்.

இலங்கை

கண்டம்பி, குலசேகரா, பெரேரா, சமர சில்வா, தரங்கா, வீரரத்னே, வெலகேதரா மற்றும் ஜோய்சா.

வெஸ்ட் இண்டீஸ்

சுலைமான் பென், டேரன் கங்கா, வேவல் ஹிண்ட்ஸ், கெய்ரன் போலார்ட், கேமர் ரோச், சர்வான், டேரன் பிராவோ மற்றும் சிம்மன்ஸ்.

பாகிஸ்தான்

அப்ரிதி, முகமது ஆமெர், சயீத் அஜ்மல், நவீத் உல் ஹசன், இம்ரான் நசீர், அப்துல் ரசாக் மற்றும் உமர் அக்மல்.

நியூசிலாந்து

ஷேன் பாண்ட், எலியட், நாதன் மெக்கலம் மற்றும் வின்சென்ட்.

வங்கதேசம்

சாகிப் அல் ஹசன், கனடா-ரிச்வான் சீமா,

ஜிம்பாப்வே-

முர்ரே குட்வின்,

ஹாலந்து-
ரியான் டென்டஸ்சேட்

0 comments:

Post a Comment