நம்பர் 1 அணியாக நீடிக்க முடியாது: சேப்பல் கருத்துக்கு டோனி கண்டனம்

டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் இந்தியா நம்பர் 1 இடத்தில் உள்ளது. பந்து வீச்சில் பலவீனமாக இருப்பதால் இந்தியா “நம்பர் 1” அணியாக நீடிக்க முடியாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், டெலிவிஷன் வர்ணனை யாளருமான இயன் சேப்பல் கருத்து தெரிவித்து இருந்தார்.

இயன் சேப்பல் இந்த கருத்துக்கு இந்திய அணி கேப்டன் டோனி கண்டனம் தெரிவித்து உள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இயன் சேப்பலின் இந்த கருத்து ஆரோக்கியமானது இல்லை. தற்போது பவுலிங்கில் பலவீனமாக இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நாங்கள் தற்போது நம்பர் ஒன் அணியாக திகழ்வதற்கு பேட்டிங் மட்டும் காரணம் இல்லை. பந்து வீச்சு உண்டு.

சில சமயம் பேட்ஸ்மேன்ஸ் ரன் குவிக்க சிரமப்படுவார்கள். சில சமயம் பவுலர்கள் விக்கெட்டுகளை கைப்பற்ற திணறுவார்கள். இதை வைத்து பவுலர்கள் சரியில்லை என்று கூறி விட முடியாது. இந்த பவுலிங்கை வைத்து “நம்பர் 1” அணி என்பதை நிரூபித்து இருக்கிறோம்.

ஜாகீர்கான் உலகின் தலை சிறந்த பவுலர்களில் ஒருவர். ஹர்பஜன்சிங்கும் சிறந்த பவுலர்.

இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment