ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் இந்திய வீரர் சேவக் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சிறந்த டெஸ்ட் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் சேவக், 804 புள்ளிகளுடன் 4வது இடத்திலிருந்து 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் 183 ரன் எடுத்த தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் (807 புள்ளி), 7 இடங்கள் முன்னேறி 4வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் இந்தியாவின் காம்பிர் (877 புள்ளி), இலங்கையின் மகிலா ஜெயவர்தனா (836), கேப்டன் சங்ககரா (835) நீடிக்கின்றனர்.
இந்தியாவின் டிராவிட் (728), லட்சுமண் (708) தலா ஒரு இடம் முன்னேறி முறையே 12வது மற்றும் 17வது இடம் பிடித்தனர். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (723), 13வது இடத்தில் நீடிக்கிறார்.
ஹர்பஜன் "6':
பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ஹர்பஜன் (712 புள்ளி), ஜாகிர் கான் (666) முறையே 6வது மற்றும் 11வது இடத்தில் தொடர்கின்றனர். முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (833), ஆஸ்திரேலியாவின் ஜான்சன் (820), பாகிஸ்தானின் முகமது ஆசிப் (792) ஆகியோர் உள்ளனர்.
இந்தியாவின் இஷாந்த் சர்மா (563 புள்ளி, 25வது), ஸ்ரீசாந்த் (533, 28வது) "டாப்-30' வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.
0 comments:
Post a Comment