இந்திய அணிக்கு பிரத்யேகமாக பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்துவதாக கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
இது குறித்து முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக வங்கதேசம் புறப்படுவதற்கு முன் மும்பையில் கேப்டன் தோனி அளித்த பேட்டி: பீல்டிங், பவுலிங்கிற்கென பிரத்யேகமாக பயிற்சியாளர்கள் இல்லாதது ஒருவிதத்தில் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பயிற்சியாளர் கிறிஸ்டனுக்கு போட்டிக்கான உத்திகளை வகுப்பது உள்ளிட்ட நிறைய பணிகள் உள்ளன. எனவே, பீல்டிங், பவுலர்களுக்கென தனியாக பயிற்சியாளர்கள் இருந்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
வங்கதேச தொடருக்கு பீல்டிங் ஆலோசகரான மைக் யங்கும் இல்லை. இவர்கள் இல்லாததால் கிறிஸ்டன் மீதான பணிச்சுமை அதிகரிக்கிறது. இதற்கான தீர்வை பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் தான் கண்டறிய வேண்டும்.
0 comments:
Post a Comment