2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி தென் ஆப்பிரிக்க அணி நாளை வருகை

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது.

இதற்காக தென் ஆப்பிரிக்க அணி நாளை (31-ந்தேதி) இந்தியா வருகிறது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் மும்பை வந்து இறங்குகிறார்கள்.அங்கிருந்து நாக்பூர் செல்கிறது. அங்கு இந்திய போர்டு தலைவர் லெவனுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் (பிப்ரவரி 2 மற்றும் 3-ந்தேதி) விளையாடுகிறது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. அதை தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் நடை பெறுகிறது.

தென் ஆப்பிரிக்க அணி முதலில் இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இந்தியா கேட்டுக் கொண்டதற்கு இணங்க 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி என சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி வருமாறு:-

கிரேமி சுமித் (கேப்டன்), காசிம் அம்லா, டிவில்லியர்ஸ், டுமினி, காலிஸ், மார்க் பவுச்சர், ஜான் போத்தா, பால் ஹாரிஸ், மெக்லரன், மோர்னே மார்கல், பர்னல், பீட்டர்சன், ஆஸ்வெல் பிரின்ஸ், ஸ்டெய்ன், சோட் சோபே.

0 comments:

Post a Comment