இந்திய அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக எரிக் சிமன்ஸ் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங்கில் பலம் பெற்று இருக்கிறது. ஆனால் பந்து வீச்சு, பீல்டிங்கில் மோசமாக உள்ளது.

சாம்பியன் டிராபி போட் டிக்கு பிறகு இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத், பீல்டிங் பயிற்சியாளர் ராபின்சிங் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

இவர்கள் நீக்கத்துக்கு பிறகு இந்திய அணி பந்து வீச்சு, பீல்டிங்கில் மிகவும் மோசமாக இருக்கிறது. பயிற்சியாளர் கிர்ஸ்டனுக்கு சுமை அதிகமாக இருப்பதால் பந்து வீச்சு பயிற்சியாளர் தேவை என்று டோனி சமீபத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் இந்திய அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளரை நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது.

தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர்கள் எரிக் சிமன்ஸ், ஆலன் டொனால்டு ஆகியோர் இதற்கான பட்டியலில் இருந்தனர். இதில் எரிக் சிமன்ஸ் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து கிரிக்கெட் வாரியம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். முன்னாள் வேகப்பந்து வீரரான எரிக் சிமன்ஸ் 2002-2004 வரை தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்தார். 23 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.


இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது

0 comments:

Post a Comment