4-வது ஐ.பி.எல். போட்டியில் 500 வீரர்களை ஏலம்விட திட்டம்

3-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற மார்ச் மாதம் தொடங்கி நடக்க உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை 3 ஆண்டுகளுக்கு மட்டுமே ஏலம் விட்டு இருந்தனர். இந்த போட்டியுடன் வீரர்கள் ஏல ஒப்பந்த காலம் முடிகிறது.

எனவே அடுத்த ஆண்டு நடக்கும் 4-வது ஐ.பி.எல். போட்டிக்கு வீரர்கள் புதிதாக ஏலம் விடப்பட உள்ளனர்.

இந்த ஏலம் வருகிற ஜூலை மாதம் நடக்கிறது. இதில் மொத்தம் 500 வீரர்கள் வரை ஏலம் விடப்பட உள்ளனர். இது உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு வீரர் ஏலமாக இருக்கும்.

தற்போது அணிகள் தங்களிடம் வைத்திருக்கும் வீரர்களில் இந்தியர் 4 பேர், வெளிநாட்டினர் 2 பேரை மீண்டும் வைத்து கொள்ளலாம். மற்றவர்களை ஏலம் மூலம் எடுக்க வேண்டும்.

தற்போது ஒரு அணியின் ஒட்டுமொத்த வீரர்கள் எண்ணிக்கையில் 10 பேர் மட்டுமே வெளிநாட்டு வீரர்கள் இருக்கலாம். இது 12 ஆக உயர்த்தப்படுகிறது. ஆனால் 11 பேர் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்ற விதி தொடர்ந்து நீடிக்கும்.

தற்போது 8 அணிகள் உள்ளன. இது 10 அணிகளாக உயர்த்தப்படுகிறது. அணிகள் அதிகரிப்பதால் போட்டிகளும் அதிகரிக்கப்படுகின்றன.

இப்போது 60 போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் எண்ணிக்கை 94 ஆக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் ஆட வேண்டும். ஒவ்வொரு வீரரும் அதிகபட்சம் 14 போட்டிகளில் ஆடலாம்.

மாலையில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இனி காலையிலும் போட்டிகள் நடத்தப்படும்.

0 comments:

Post a Comment