சச்சின் வாங்கிய காருக்கு வரி செலுத்தாததால், நவி மும்பை மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மும்பையில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் புதிய வாகனங்களை பதிவு செய்பவர்கள் முறையாக வரி செலுத்துவதில்லை. இதுகுறித்து நவி மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,"" இதுவரை வாகனங்களுக்கான பதிவு வரியாக, சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் கட்டப்படாமல் உள்ளது.
இதுகுறித்து கடந்த 15 நாட்களுக்கு முன், மத்திய நிதித்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டு இருந்தது,'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பட்டியலில் சச்சின்:
இதையடுத்து கட்டப்படாமல் உள்ள வரியை வசூலிக்கும் முயற்சியில் மாநகராட்சி இறங்கியது. ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து வரி கட்டாதவர்கள் விபரத்தை பெற்று அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் பெயரும் இடம் பெற்றுள்ளது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி <உள்ளது.
சொகுசு கார்:
சமீபத்தில் இவர் வாங்கிய பி.எம்.டபிள்யு.எம் 5 என்ற சொகுசுக் காரை, நவி மும்பை பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால் இதற்கான ஒரு லட்ச ரூபாய் வரியை இவர் செலுத்தாமல் இருந்தது இப்போது தெரிய வந்துள்ளது.
கடந்த கடைசி காலாண்டில் (2009 அக்.,-டிச.,) மட்டும் ஒன்றரை கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ள சச்சின், ஒரு லட்ச ரூபாய் கட்டணத்தை செலுத்தாதது வியப்பாக உள்ளது.
இதுகுறித்து நவி மும்பை மாநகராட்சி துணை கமிஷனர் (வரி) மகாவீர் பெந்தாரி கூறுகையில்,"" நவி மும்பை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கார் பதிவு செய்த பலர், இன்னும் அதற்குரிய வரி செலுத்தாமல் இருந்தனர்.
அவர்களது முகவரியை வாங்கி, முறைப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதில் கிரிக்கெட் வீரர் சச்சினும், தனது காருக்கு ஒரு லட்ச ரூபாய் வரி செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது,'' என்றார்.
0 comments:
Post a Comment