டெல்லி மைதானம் சர்ச்சை கிரிக்கெட் வாரியம் அறிக்கை தாக்கல்

இந்தியா-இலங்கை அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. டெல்லி ஆடுகளம் மோசமாக இருந்ததால் 23.3. ஓவர் வீசிய நிலையில் ரத்து செய்யப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

போட்டி நடுவர் டெல்லி ஆடுகளம் விளையாடுவதற்கு தகுதி இல்லை என்று தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன் சில்) உத்தரவிட்டது.

அதன்படி டெல்லி ஆடுகளம் குறித்த அறிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை பெற்றுக் கொண்டதாக ஐ.சி.சி. அறி வித்து உள்ளது. ஐ.சி.சி. பொது மேலாளர் ரிச்சர்ட்சன், தலைமை நடுவர் மதுகல்லே ஆகியோர் இது குறித்து முடிவு செய்வார்கள்.

ஆடுகளம் விளையாடுவதற்கு தகுதி இல்லை என்றால் ஒரு ஆண்டு அல்லது 2 ஆண்டு தடை விதிக்கப்படும். அதோடு அபராதமும் விதிக்கப்படும்.


கிரிக்கெட் வாரியம் தனது அறிக்கையில் ஆடுகளம் மோசமாக இருப்பது உண்மை தான். ஆனால் விளையாட தகுதியான ஆடுகளம் தான் என்று தெரிவித்து உள்ளது.

0 comments:

Post a Comment