சென்னையில் 3-ந்தேதி ஐ.பி.எல். ஏலம்

6-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடக்கிறது. கிண்டியில் உள்ள ஐ.டி.சி ஓட்டலில் காலை 11 மணிக்கு ஏலம் தொடங்குகிறது.  ஒப்பந்தம் முடிந்த வீரர்களும், ஐ.பி.எல். போட்டியில் ஆடாத வீரர்களும் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். ஏலப்பட்டியலில் 101 வீரர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எல்லையில் நிலவும் பதட்டம் காரணமாக பாகிஸ்தான் வீரர்களும் இந்த முறையும் ஏலப்பட்டியலில் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலிய...

அனல் பறக்கும் இந்தியா-ஆஸி., தொடர்

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் தொடரில் அனல் பறப்பது நிச்சயம்,'' என, முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்தார். அடுத்த மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பிப்., 22 முதல் மார்ச் 24 வரை) பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் சென்னையில் பிப்., 22 முதல் 26 வரை நடக்கிறது. சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்திலுள்ள ஆஸ்திரேலிய அணி, இத்தொடரை முழுமையாக (4-0) வென்றால் 121 புள்ளிகள் கிடைக்கும்.  அதேநேரம்,...

சேவக்கை தொடர்ந்து அபாய நிலையில் காம்பிர்

சேவக்கை தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் காம்பிரும், இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் அபாயத்தில் உள்ளார். இந்திய அணியின் துவக்க வீரர் காம்பிர், 31. இதுவரை 54 டெஸ்டில் பங்கேற்றுள்ள இவர், கடைசியாக 2010, சிட்டகாங்கில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் (116) அடித்தார். இதன் பின் விளையாடிய 26 டெஸ்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.  ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில், 2012, ஜூலையில் இலங்கைக்கு எதிரான கொழும்பு போட்டியில் சதம் அடித்தார்....

இந்திய அணிக்கு தோனி கிடைத்தது அதிர்ஷ்டம்

இந்திய அணிக்கு தோனி கிடைத்தது அதிர்ஷ்டம். சுமாரான அணியை சிறப்பாக வழி நடத்துகிறார்,'' என, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் பாராட்டு தெரிவித்தார். இந்திய அணிக்கு "டுவென்டி-20', 50 ஓவர் உலக கோப்பையை வென்று தந்தவர் தோனி. இதுவரை 134 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய தோனி, 77ல் வென்று, அதிக வெற்றிகள் பெற்றுத்தந்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.  இதுகுறித்து ஜெப்ரி பாய்காட் கூறியது: இந்திய அணியை எடுத்துக்கொண்டால்,...

வரலாறு படைத்தது நியூசிலாந்து

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் சதம் அடிக்க, நியூசிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.  இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றியது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி கிம்பர்லியில் நடந்தது. "டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி "பீல்டிங்' தேர்வு செய்தார்.  கப்டில் ஏமாற்றம்:  நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர் கப்டில் "டக்' அவுட்டானார். வாட்லிங்...

மன்னிப்பு கேட்டார் கோஹ்லி

விதியை மீறி "மீடியாவுக்கு' பேட்டி கொடுத்த செயலுக்காக மன்னிப்பு கேட்டார் இந்திய வீரர் விராத் கோஹ்லி.  இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) விதிப்படி, தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, போட்டியன்று ஏற்பாடு செய்யப்படும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு தவிர, மற்றபடி யாரும் "மீடியாவிடம்' பேசக் கூடாது. கேப்டன் மட்டும் பிற இடங்களில் கருத்துக்களை தெரிவிக்கலாம்.  இவ்விதியை மீறியுள்ளார் விராத் கோஹ்லி. கடந்த 19ம் தேதி, டில்லியில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் இவரது பேட்டி வெளிவந்தது. இதில் இந்திய அணியின் எதிர்காலம் உட்பட பல பிரச்னைகள்...

மும்பை அணியில் சச்சின் மகனுக்கு இடமில்லை

மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்ட சச்சின் மகன் அர்ஜுனுக்கு விளையாடும் "லெவனில்' வாய்ப்பு தரப்படவில்லை.  இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.  இவரது வாரிசு அர்ஜுன் டெண்டுல்கரும், 13, கிரிக்கெட் அரங்கில் "ஆல்-ரவுண்டராக' வளர்ந்து வருகிறார்.  உள்ளூர் ஜிம்கானா அணி சார்பில் அசத்தி வரும் இவர், 14 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்டார்.  இவரை விட...

மைக் ஹஸ்சி ஓய்வு அதிர்ச்சி அளிக்கிறது - பாண்டிங்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான மைக் ஹஸ்சி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கைக்கு எதிராக நடந்த 3-வது டெஸ்டில் விளையாடியதே அவரது கடைசி டெஸ்ட் ஆகும். இந்த நிலையில் மைக் ஹஸ்சியின் ஓய்வு முடிவு தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஹஸ்சியின் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது....

கங்குலியை சமன் செய்த டோனி

டோனி தலைமையில் இந்திய அணி ஒருநாள் போட்டியில் 76-வது வெற்றியை பெற்றது.  133 ஆட்டத்தில் விளையாடி இந்த வெற்றியை பெற்றது. 46 ஆட்டத்தில் தோற்றது.  3ஆட்டம் `டை' ஆனது. 8 ஆட்டம் முடிவு இல்லை. இதன்மூலம் கங்குலி வெற்றியை டோனி சமன் செய்தார்.  கங்குலி தலைமையில் இந்திய அணி 146 ஆட்டத்தில் விளையாடி இந்த வெற்றியை பெற்றது. 65 ஆட்டத்தில் தோற்று, 5 ஆட்டம் முடிவு இல்லை.  ஒருநாள் போட்டியில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன்களில் டோனியும், கங்குலியும் இணைந்து 2-வது இடத்தில் உள்ளனர். இன்னும் ஒரு ஆட்டத்தில் வென்றால் டோனி முன்னேறிவிடுவார்.  அசாருதீன்...

பி.சி.சி.ஐ., செய்தது சரியா? - அதிருப்தியில் மும்பை அணி

சர்வீசஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டி, மழையால் தடைபட்டதால், மும்பை அணி அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. மும்பை, சர்வீசஸ் அணிகள் இடையிலான ரஞ்சி கோப்பை அரையிறுதி டில்லி பாலம் மைதானத்தில் நடக்கிறது. முதல் ஒன்றரை நாட்கள் மட்டும் நடந்த இப்போட்டியில், மும்பை அணி முதல் இன்னிங்சில், 6 விக்கெட்டுக்கு 380 ரன்கள் எடுத்திருந்தது.  இதனிடையே, கடந்த 17ம் தேதி இரவு, புயல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஆடுகளத்தை மூன்று அடுக்கு தார்ப்பாய்களால்...

இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் மகேந்திர சிங் டோனி கூறியதாவது:- இந்திய அணி இர்பான் பதானுக்கு அடுத்து ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் இல்லாமல் திணறி வந்தது. ஆனால் இப்பொழுது அந்த இடத்திற்கு ரவீந்திர ஜடேஜா பொருத்தமாக வந்துள்ளார்.  இந்திய அணியை சமநிலையில் கொண்டு செல்பவர்களில்...

தோனியை விமர்சிக்கலாமா ?

தோனியை விமர்சிப்பது என்பது சச்சினின் ரன் எடுக்கும் திறமையை கேள்வி கேட்பதற்கு சமம்,'' என, பயிற்சியாளர் சன்ச்சல் பட்டாச்சார்யா தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக் கேப்டன் தோனி, 31. "டுவென்டி-20', 50 ஓவர் உலக கோப்பை போன்வற்றை பெற்றுத்தந்தவர். சமீப காலமாக இவரது தலைமையில் அணியின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை.  இதையடுத்து இவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கு தோனியின் முதல் பயிற்சியாளராக...

கேப்டன் பதவியில் நீடிக்கலாமா? - தோனிக்கு அட்வைஸ்

இளம் வீரர்களுக்கு வழி விட்டு, "டுவென்டி-20' அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக வேண்டும்,'' என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்தார். "டுவென்டி-20' உலக கோப்பை போட்டியின் முதல் கோப்பையை இந்திய அணிக்கு முதன் முறையாக (2007) வென்று தந்தவர் கேப்டன் தோனி. தொடர்ந்து கேப்டன் பணியில் ஜொலிக்கும் இவர், 2010ல் ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக், 2011ல் ஐ.பி.எல்., என, மூன்று முறை உள்ளூர் "டுவென்டி-20' போட்டிகளில், சென்னை அணிக்காக...

தோனி அபாயகரமான பேட்ஸ்மேன்

இந்தியாவுடனான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது குறித்து அந்த அணியின் கேப்டன் குக் கூறியதாவது:-  தோனியும், ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது.  இருவரும் எந்த பந்து வீச்சாளர்களையும் விட்டு வைக்காமல் அதிரடியாக ஆடினார்கள்.  தோனி கடைசி வரை நின்று ஆடினால் கஷ்டம்தான். அவர் ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன்.  பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் அவர் சிறப்பாக ஆடியதை பார்த்து இருந்தேன்.  இதேபோல...

கொச்சியில் பதிலடி கொடுத்தது இந்தியா

கொச்சியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ராஜ்கோட்டில் பெற்ற தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது. டிண்டா நீக்கம்...  இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.  இந்நிலையில் இரண்டாவது...

இந்திய அணியில் ரோகித் சர்மா தேவையா?

இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பது பெரும் வியப்பாக உள்ளது.  இந்திய அணியின் "மிடில் ஆர்டர்' வீரர் ரோகித் சர்மா, 30. இதுவரை 86 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 2010ல் அடித்த இரு சதங்கள் உட்பட 1978 ரன்கள் எடுத்துள்ளார்.  உள்ளூர் போட்டிகளில் மட்டும் வெளுத்து வாங்குவார். இப்போதைய ரஞ்சி கோப்பை தொடரில், ஐதராபாத் அணிக்கு எதிராக 112 (நவம்பர்), டிசம்பரில் பஞ்சாப்புடன் 203, சவுராஷ்டிராவுடன் 166 ரன்கள் எடுக்க,...

ஒலிம்பிக் தந்த மாற்றம்

லண்டனில் கடந்த ஆண்டு நடந்த 30வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 6 பதக்கங்களை வென்றது. பதக்கம் வென்று சாதித்தவர்களின் வாழ்க்கை தற்போது எப்படி மாறி உள்ளது என்பதை அவர்களிடமே கேட்போம். சுஷில் குமார்(மல்யுத்தம், வெள்ளி): கடந்த 2008ல் பீஜிங் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முன்பு எப்படி இருந்தேனோ, இதுவரை அப்படி தான் இருக்கிறேன். ஒரு நட்சத்திரமாக என்னை கருதவில்லை.  லண்டன் ஒலிம்பிக் பதக்கத்திற்கு பிறகு எந்த ஒரு பொருளும் வாங்கவில்லை. என்னிடம்...

அர்ஜூன் டெண்டுல்கர் தேர்வில் சர்ச்சை

14வயதுக்குட்‌பட்டோர் மும்பை கிரிக்கெட் அணியில் சச்சின் மகன் தேர்வு செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  திறைமை இருந்தும் சிலர் தேர்வு செய்யப்படாமல் சச்சின் மகனை தேர்வு செய்ததன் மர்மம் என்ன ? என தேர்வு செய்யப்படாதவர்களின் ‌பெற்றோர் புகார் கூறியுள்ளனர். இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்(40). இவர் சமீபத்தில் ஒரு நாள் போட்டிக்கு குட்பை சொல்விட்டார். இவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் (14). இவர் மகாராஷ்டிரா கிரிக‌்கெட்...

சச்சினுக்கு வந்த ஆசை - பி.சி.சி.ஐ., மறுப்பு

ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியை, மும்பைக்கு மாற்ற வேண்டும் என்ற சச்சினின் வேண்டுகோளை ஏற்க பி.சி.சி.ஐ., மறுத்து விட்டது. ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிகள், ஜன.16ம் தேதி துவங்குகின்றன. பொதுவாக ரஞ்சி போட்டிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் நடக்கும். 1964-65 தொடரில் மும்பை - சர்வீசஸ் அணிகள் மோதிய அரையிறுதி போட்டி, மும்பையில் நடந்தது.  இம்முறை சுழற்சி விதிப்படி, மும்பை அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி, சர்வீசஸ் அணியின் சொந்த மண்ணான டில்லி, பாலம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இப்போட்டியை, தனது சொந்த ஊரான மும்பைக்கு மாற்ற வேண்டும் என,...

இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பஞ்சமில்லை

இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பஞ்சமில்லை. எனினும் வளர்ந்து வரும் வீரர்கள் உலகத் தரம் வாய்ந்த வீரர்களாக உருவெடுக்க சில காலம் ஆகும் என்று ஐசிசி மற்றும் பிசிசிஐயின் முன்னாள் தலைவரான சரத் பவார் தெரிவித்தார். தொடர் தோல்விகளால் இந்திய அணி துவண்டு வரும் நிலையில், இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: இந்தியாவில் ஏராளமான திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். எனினும் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற இளம் வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. ஒரு காலத்தில் மும்பை, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் இருந்து...

கேப்டன் பதவியை உதறுங்கள் - தோனிக்கு டிராவிட் அட்வைஸ்

தோனி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக நீடிப்பது கடினம். இதனை உணர்ந்து "டுவென்டி-20' போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும்,'' என, டிராவிட் ஆசோசனை கூறினார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி இழந்தது. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் பறிகொடுத்தது.  இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது. இது குறித்து இந்திய...