பைக் பயிற்சி மையம் துவங்குகிறார் தோனி


இந்திய அணி கேப்டன் தோனி, சென்னை, கோவையில் "பைக் பயிற்சி மையம் துவங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி. "பைக் பிரியரான இவர், பல்வேறு ரக பைக்குகளை சொந்தமாக வைத்துள்ளார். இது தவிர, சர்வதேச மோட்டார் ரேசிங் பந்தயத்தில் பங்கேற்க, ஒரு அணியை வாங்கியிருந்தார். இதற்கு "எம்.எஸ்.டி., ஆர்-என் ரேசிங் டீம் என பெயரிடப்பட்டது. 

இது ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் பைக் ரேஸ் வீரர் எம்.சாய் தீப் ("எம்.எஸ்.டி.,) பெயருடன் ஒத்திருந்ததால், தற்போது "மகி ரேசில் டீம் இந்தியா என, பெயர் மாற்றப்பட்டதாக தெரிகிறது.

இந்த அணியின் அறிமுகம் மும்பையில், அடுத்தவாரம் நடக்கவுள்ளது. அப்போது மோட்டார் "ரேசிங் பயற்சி பள்ளி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது. 

இந்தியாவில் சென்னை மற்றும் கோவையில் மோட்டார் பைக் ரேசிங் சர்கியூட்கள் இருப்பதால், தோனியின் பயிற்சி மையம், இந்த இடங்களில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து அணியின் இயக்குனர் அமித் சாண்டில் கூறுகையில்,"" அணியின் பெயர் மாற்றப்பட்டதுக்கு நடைமுறைக் காரணங்கள் தான் காரணம். மற்றபடி எதுவும் இல்லை. 

இதற்கு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உட்பட நான்குபேர் உரிமையாளர்களாக உள்ளனர். கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து இருப்பதால், அணியுடன் தோனியால் சேர்ந்திருக்க முடியவில்லை. அதேநேரம், அணியின் நடவடிக்கை குறித்து தோனி, தொடர்ந்து கவனித்து வருகிறார் என்றார்.

0 comments:

Post a Comment