இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை நோக்கி செல்கிறது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் மும்பையில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்திருந்தது.
குக் சதம்:
முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக், பீட்டர்சன் நல்ல துவக்கம் கொடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குக் டெஸ்ட் அரங்கில் 22வது சதம் கடந்தார். இவர் 122 ரன்கள் எடுத்த போது அஷ்வின் "சுழலில் சிக்கினார்.
எதிர் முனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பீட்டர்சன்(186) ஓஜா பந்தில் வெளியேறினார். பின் வந்த பேர்ஸ்டவ் (9) ஏமாற்றினார். பின்வரிசையில் பிரையர் (21), பிராட்(6), ஆண்டர்சன் (2), பனேசர் (4) அடுத்தடுத்து அவுட்டாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 413 ரன்களுக்கு "ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 86 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்திய அணிக்கு ஓஜா 5 விக்கெட் வீழ்த்தினார்.
பனேசர் அசத்தல்:
பின் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு சேவக் (9) நிலைக்கவில்லை. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் விளையாடினர். புஜாரா (6), சச்சின்(8), கோஹ்லி(7), தோனி (6), யுவராஜ்(8) ஏமாற்றினர். மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில்,இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.
இங்கிலாந்து அணிக்கு பனேசர் 5 விக்கெட் கைப்பற்றினார். தற்போது 31 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி எதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே தோல்வியில் இருந்து தப்ப முடியும்.
0 comments:
Post a Comment