
இந்திய கேப்டன் தோனியின் வேண்டுகோளுக்கு ஒத்துழைக்காத ஈடன் கார்டன் ஆடுகள பராமரிப்பாளர் மாற்றப்பட்டார். இதனால், புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இங்கிலாந்து தொடரில் ஆடுகளம் குறித்து தொடர்ந்து பிரச்னை ஏற்படுகிறது. ஆமதாபாத் டெஸ்டில் "சுழலுக்கு' ஆடுகளம் ஒத்துழைக்க, இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆனாலும், ஆடுகளம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என தோனி புகார் கூறினார். மும்பை போட்டிக்கு, பந்து முதல் நாளில் இருந்தே சுழலுமாறு ஆடுகளம் அமைக்க...