சைமண்ட்ஸ் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர், தன்னை திட்டியதாக யூசுப் பதான் குற்றம்சாட்டியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ். ஒழுங்கீனத்துக்கு பெயர் போன இவர், எதிரணி வீரர்களை வார்த்தையால் திட்டி, சர்ச்சை கிளப்புவார். கடந்த 2008ல் நடந்த சிட்னி டெஸ்டில் ஹர்பஜன் மற்றும் சைமண்ட்ஸ் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போதை ஐ.பி.எல்., தொடரில் யூசுப் பதானை திட்டி, பிரச்னை கிளப்பியுள்ளார்.
யூசுப் பதானை திட்டிய சைமண்ட்ஸ்
நேற்று முன்தினம் ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான், டெக்கான் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் வீரர் யூசுப் பதான், பேட்டிங் செய்ய வந்தபோது, டெக்கான் அணிக்காக விளையாடும் சைமண்ட்ஸ் வார்த்தையால் திட்டியுள்ளார். இதுகுறித்து யூசுப் பதான் கூறியது:
பொதுவாக எதிரணியினர் ஏதாவது தூண்டும் வகையில் செயல்பட்டால் அதுவே, நாம் சிறப்பாக விளையாட வழிவகுக்கும். டெக்கான் அணிக்கு எதிராக நான் "பேட்டிங்' செய்ய களமிறங்கிய போது, சைமண்ட்ஸ் என்னைப் பார்த்து திட்டினார். இதுவே எனக்கு தூண்டுதலாக அமைய, 34 பந்துகளில் 73 ரன்கள் விளாசினேன். இருப்பினும் சைமண்ட்ஸ் மீது புகார் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை.
டெக்கான் அணிக்கு எதிரான எனது ஆட்டம், போட்டியை பார்க்க வந்திருந்த எனது பெற்றோருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என நம்புகிறேன். தவிர, ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைத்தது. ரசிகர்கள் ஆதரவும் பெரும் ஊக்கமாக இருந்தது.
இவ்வாறு யூசுப் பதான் கூறினார்.
0 comments:
Post a Comment