பொலிவுடன் காணப்படும் சேப்பாக்கம் மைதானம்

ஐ.பி.எல்., உலககோப்பை போட்டிக்கான சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுகிறது. ஐ.பி.எல். போட்டிக்கான ஸ்டேடியத்தில் கிழக்கு பகுதி (2 ஸ்டாண்டு) புதுப்பிக்கப்பட்டுள்ளது. கிழேயும், மேலேயும் ரசிகர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இருக்கைகளுக்கு கலர் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. கூரைகள் நவீன வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. போட்டியின்போது சேப்பாக்கம் ஸ்டேடியம் புதிய பொலிவுடன் காணப்படும். உலக கோப்பை போட்டிக்கு முன்பு முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டுவிடும். இதனால் லார்ட்ஸ் மைதானம் போல் இனி சேப்பாக்கம் ஸ்டேடியம் பிரமாண்டமாக இருக்கும்.

* சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி 2008-ம் ஆண்டு கடைசியில் கடந்தது. இதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கு போட்டி நடந்ததால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் அடைந்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு அனுராதாஸ்ரீராம் பாட்டு பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

* தமிழ்பட குத்துப்பாடல்களுக்கு சென்னை, ஐதராபாத் அணிகளின் வெளிநாட்டு நடன மங்கைகள் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.

* ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கொடிகள் விற்பனை அமோகமாக இருந்தது. வியாபாரிகள் காட்டில் மழைதான். இதேபோல ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல்ல லாபம்தான். போட்டி முடிந்ததும் நள்ளிரவில் ரசிகர்கள் அதிக கட்டணத்தில் ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

* போலீஸ் பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கமாண்டோ படை பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

0 comments:

Post a Comment