ஐபிஎல் டிவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்கள் மற்றும் அம்பயர்கள் பெயரில் ரூ.1,276 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் 3வது சீசன் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் துவங்கியுள்ளது. மொத்தம் 60 போட்டிகளைக் கொண்ட இத்தொடர் ஏப்ரல் மாதம் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், விளையாடும் அனைத்து வீரர்கள் மற்றும் அம்பயர்களுக்கு ஓரியன்டல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ரூ.1,276 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. கெய்ரன் போலார்டுக்கு ரூ.15 கோடி : இதுதவிர, இந்திய கிரிக்கெட் போர்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் ரூ.1,100 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளது. தனி நபர் காப்பீட்டில் அதிகபட்சமாக, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கெய்ரன் போலார்டுக்கு ரூ.15 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு இவ்வளவு அதிகபட்ச தொகைக்கு இன்சூரன்ஸ் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதன்படி, போட்டி துவங்கியது முதல் முடியும் வரையில், விபத்து, உடமைகள் இழப்பு, மருத்துவ செலவு ஆகிய அனைத்துக்கும் இன்சூரன்ஸ் கிடைக்கும் என ஓரியன்டல் இன்சூரன்ஸ் துணைப் பொது மேலாளர் பட்நாகர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment