வரலாற்றில் முதல் முறை

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நேரத்தில் 7 வீரர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது இது தான் முதல் முறை. கடந்த 2000 ல் சூதாட்ட சர்ச்சை தொடர்பாக சலீம் மாலிக் உள்ளிட்ட சில வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது ஆஸ்திரேலிய தொடரில் அடைந்த தோல்விக்காக கடும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

பி.சி.பி., மறுப்பு

யூசுப் மற்றும் யூனிஸ் கானுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மறுத்துள்ளது.

இதன் சட்ட ஆலோசகர் தபாஜுல் ரிஸ்வி கூறுகையில்,""யூசுப் மற்றும் யூனிஸ் கான் ஆகியோர் உள்ளூர் மற்றும் அன்னிய மண்ணில் நடக்கும் கவுன்டி போன்ற போட்டிகளில் விளையாடலாம். பாகிஸ்தான் அணி சார்பில் மட்டுமே சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது. இதனால் இது ஆயுட் தடை அல்ல,'' என்றார்.

பாக்., அணியின் எதிர்காலம்?

தற்போது அணியில் விளையாடி வரும் 7 வீரர்கள் மீது, ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, அணியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி <உள்ளது. அடுத்த மாதம் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் துவங்கவுள்ள நிலையில், வீரர்கள் மீதான தடைகள் அணியின், நலனை பாதிப்பது <உறுதி.


வீரர்களின் தடை விபரம்:

முகமது யூசுப் (35)

பாகிஸ்தான் அணிக்காக 22 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி வரும் இவர், 88 டெஸ்ட் (7431 ரன்), 282 ஒருநாள் போட்டிகள் (9624 ரன்) மற்றும் ஒரு "டுவென்டி-20' (20 ரன்) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். பி.சி.பி.,க்கு எதிராக செயல்பட்டதால், இவருக்கு தேசிய அணியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

யூனிஸ் கான் (32)

பாகிஸ்தான் அணியில் கடந்த பத்து ஆண்டுகளாக விளையாடி வரும் இவர், சிறந்த "மிடில் ஆர்டர்' வீரர். இதுவரை 63 டெஸ்ட் (5260 ரன்), 202 ஒருநாள் போட்டிகள் (5765 ரன்) மற்றும் 20 "டுவென்டி-20' (430 ரன்) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். கடந்த 2009 "டுவென்டி-20' உலக கோப்பை வென்று தந்தவர். பி.சி.பி.,க்கு எதிராக செயல்பட்டதால், இவருக்கு தேசிய அணியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்ரிதி (30)

அணியின் சிறந்த "ஆல் ரவுண்டரான' இவர் சமீபத்தில் "டுவென்டி-20' அணியின் கேப்டனானார். இவர், 26 டெஸ்ட் (1683 ரன்), 293 ஒருநாள் போட்டிகள் (5957 ரன்) மற்றும் 27 "டுவென்டி-20' (495 ரன்) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை கடித்து சேதப்படுத்தியதால், அப்ரிதிக்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தவிர, இவரது நடவடிக்கை 6 மாத காலத்துக்கு கண்காணிக்கப்பட உள்ளது.

சோயப் மாலிக் (28)

சிறந்த பேட்ஸ்மேனான இவர், அவ்வப்போது பவுலிங்கிலும் அசத்துவார். 29 டெஸ்ட் (1517 ரன்), 190 ஒருநாள் போட்டிகள் (5141 ரன்) மற்றும் 30 "டுவென்டி-20' (603 ரன்) ஆட்டத்தில் விளையாடியுள்ளார். இவர், போர்டுக்கு எதிராக செயல்பட்டது மற்றும் கோஷ்டி சேர்த்தது போன்ற காரணங்களுக்காக ஒரு ஆண்டு தடை, 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராணா நவீது (32)

மிதவேகப்பந்து வீச்சாளரான இவர் இதுவரை 9 டெஸ்ட் (18 விக்கெட்), 74 ஒருநாள் போட்டிகள் (110 விக்.,) மற்றும் 4 "டுவென்டி-20' (5 விக்.,) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். இவர், போர்டுக்கு எதிராக செயல்பட்டது மற்றும் கோஷ்டி சேர்த்தது போன்ற காரணங்களுக்காக ஒரு ஆண்டு தடை, 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கம்ரான் அக்மல் (28)

கடந்த 2002ல் அறிமுகமான இவர், 2004 முதல் ஐந்து ஆண்டுகளாக அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக இருந்தார். இதுவரை 48 டெஸ்ட் (2550 ரன்), 115 ஒருநாள் போட்டிகள் (2288 ரன்) மற்றும் 28 "டுவென்டி-20' (451 ரன்) ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், இவருக்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உமர் அக்மல் (19)

சமீபத்தில் அணியில் இடம் பெற்று அசத்தி வந்த இவர், இதுவரை 6 டெஸ்ட் (578 ரன்), 15 ஒருநாள் போட்டிகள் (498 ரன்) மற்றும் 6 "டுவென்டி-20' (159 ரன்) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், இவருக்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment