கிரிக்கெட் தவிர பிற விளையாட்டுக்களுக்கு ஆதரவே இல்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்; சாதிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன' என்கிறார் எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரப்பெண் கிருஷ்ணா பட்டீல். நான் எவர�ஸ்ட் சிகரத்தில் ஏறியபோது வங்கி என் தந்தையின் கடன் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.ஒரே ஒரு விளையாட்டைத் தவிர பிற சாதனைகளுக்கு நிதியுதவி என்பது இந்நாட்டில் மிகவும் கடினம். இந்நிலையை ஊடகங்கள்தான் மாற்ற வேண்டும். நான் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 45 நிமிடங்கள் நின்றேன். பின், அம்மாவுக்கு போன் செய்து என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். என் நினைவாக அங்கு எதையும் நான் விட்டு வரவில்லை. ஆனால், என் பணி இன்னும் முடியவில்லை. என் அனுபவங்களைத் திரட்டி அடுத்தாண்டு புத்தகமாக வெளியிட எண்ணியுள்ளேன்.அடுத்து நான் செய்யப்போவது இமாலயப் பிரதேசத்திலுள்ள குப்பைகளை அகற்றும் திட்டம்.இவ்வாறு பட்டீல் தெரிவித்தார்
கிரிக்கெட் ஒன்றுதான் விளையாட்டா?
மும்பையைச் சேர்ந்த இளம்பெண் கிருஷ்ணா பட்டீல்(19), 2009, மே மாதம் 21ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். சாதனை படைத்த கையோடு, மும்பையிலுள்ள நேரு அறிவியல் மையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தான் எதிர்கொண்ட வேதனைகளையும் அவர் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் கிரிக்கெட்டைத் தவிர வேறு விளையாட்டுக்களே இல்லை என்ற மனோபாவம் இருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம், இந்திய ஹாக்கி அணியினர் தங்கள் சம்பளத்தை உயர்த்தப் போராடியது. இது ஹாக்கி அணிக்கு மட்டுமல்ல.
கிரிக்கெட் தவிர வேறு எந்த விளையாட்டை விளையாடவோ அல்லது சாதனை பண்ணவோ நீங்கள் முயற்சித்தால் அதற்கு இங்கு எவ்வித உதவியும் கிடைக்காது என்பதற்கு நானே நல்ல உதாரணம்.நான் சிறுவயதில் இருந்தபோது என் அம்மா, நான் ஒரு விண்வெளி வீராங்கனையாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்.
இப்போது, எவரெஸ்ட் சிகரம் ஏறப் போகிறேன், அதற்கு நிதியுதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தபோது, எந்த அமைப்பும் எனக்கு நிதியுதவி செய்ய முன்வரவில்லை.என் தந்தை, வங்கியில் 30 லட்சம் கடன் வாங்கத் தீர்மானித்தார். நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.
0 comments:
Post a Comment