டெஸ்ட் போட்டிகளை பகலிரவு ஆட்டங்களாக நடத்த வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் இவ்வகை போட்டிகள் அழியும் நிலை ஏற்படும்,'' என, லலித் மோடி தெரிவித்துள்ளார். மாற்றம் அவசியம்: டெஸ்ட் போட்டிகள் ஆபத்தான நிலையில் உள்ளன. நவீன காலகட்டத்தில் இவ்வகை போட்டிகளை பார்க்க, மக்களுக்கு நேரம் கிடையாது. தங்கள் பணிகளை தவிர்த்து விட்டு, பகல் நேரங்களில் இப்போட்டிகளை பார்க்க அவர்கள் விரும்பவில்லை. பகலில் நடக்கும் போட்டிகளை, நேரடி ஒளிபரப்பு செய்ய பல நிறுவனங்களும் தயங்கி வருகின்றன. இந்நிலையில் பகலிரவு ஆட்டங்களாக நடத்தினால் மட்டுமே, டெஸ்ட் போட்டிகளை ஆபத்திலிருந்து மீட்க முடியும். இவ்வாறு மோடி தெரிவித்தார்
டெஸ்ட் போட்டிக்கு ஆபத்து
இது குறித்து மோடி கூறியது: கிரிக்கெட்டின் புதிய பரிமாணமான "டுவென்டி-20' போட்டிகள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளை விட, இவ்வகை போட்டிகளுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நாள் முழுவதும் நடக்கும் டெஸ்ட் போட்டிகளை பார்க்க, ரசிகர்களுக்கு தற்போது நேரம் கிடையாது. கால்பந்து உள்ளிட்ட ஒரு சில விளையாட்டுகளுடன் கிரிக்கெட் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. 3 மணி நேரம் மட்டுமே நீடிக்கும் "டுவென்டி-20' போட்டிகளால், கிரிக்கெட் மீதான ஈர்ப்பு மக்களிடம் அதிகரிக்கும்.
0 comments:
Post a Comment