இந்தியாவுக்கு எதிரான தொடரில் அனுபவ வீரர்கள் கைகொடுப்பார்கள்,'' என, தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் கிரீம் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஸ்மித் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணி இன்று இந்தியா வருகிறது. இங்கு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் பிப்., 6ல் நாக்பூரில் துவங்கவுள்ளது. அதற்கு முன்னதாக பிப்., 2 ம் தேதி துவங்கும் தென் ஆப்ரிக்க அணி, இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. சமீபத்தில் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பயிற்சியாளர்...