டர்பனில் டர்ர்ர்ர்... - தொடரை இழந்தது இந்தியா

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டர்பன் டெஸ்டில், பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்த, இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இளம் வீரர் ரகானே அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார்.                                      தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட்...

வெற்றியுடன் விடைபெற்றார் காலிஸ்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டர்பன் டெஸ்டில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த தென் ஆப்ரிக்க ‛ஆல்-ரவுண்டர்’ காலிஸ் வெற்றியுடன் விடைபெற்றார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் "டிரா'வில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் டர்பனில் நடக்கிறது.  இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்கள், தென்ஆப்ரிக்க அணி 500 ரன்கள்...

விராத் கோஹ்லி நம்பர் 2

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 2வது இடத்தில் நீடிக்கிறார். ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.  இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் நீடிக்கிறார்.  மூன்றாவது...

ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கு சிக்கல்

வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு, புதிய வடிவத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் 2014, பிப்., 24 முதல் மார்ச் 8 வரை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட், வரும் மார்ச் 16 முதல் ஏப்., 6 வரை "டுவென்டி-20' உலக கோப்பை தொடர்கள் நடக்கவுள்ளன.  வங்கதேசத்தில் நடக்கும் கலவரம், பாகிஸ்தான் அணி மறுப்பு காரணமாக, உலக கோப்பை "டுவென்டி-20' தொடரை இந்தியாவுக்கு மாற்ற பரிசீலனை நடக்கிறது....

ஓய்வு பெறுவாரா ஹர்பஜன்?

இந்திய அணிக்காக இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் விளையாடுவேன். தற்போது ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, ஹர்பஜன் சிங் தெரிவித்தார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், 33. இதுவரை 101 டெஸ்ட் (413 விக்.,), 229 ஒரு நாள் (259 விக்.,), 25 "டுவென்டி-20' (22 விக்.,) போட்டியில் விளையாடி உள்ளார்.  கடைசியாக கடந்த மார்ச் மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்றார். தற்போது ரஞ்சி கோப்பையில் கலந்து கொள்கிறார்....

பிரிமியர் கிரிக்கெட் - புதிய விதிமுறைகள்

ஏழாவது பிரிமியர் தொடருக்கான ஏலம், அடுத்த ஆண்டு பிப்., 12ம் தேதி நடக்கவுள்ளது.  இந்தியாவில் கடந்த 2008 முதல் பிரிமியர் "டுவென்டி-20' தொடர் வெற்றிகரமாக நடந்து வருகிறது. புனே அணி சமீபத்தில் நீக்கப்பட்டதால், இம்முறை சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி, பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான் என, மொத்தம் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன.  முதல் தொடரில் ஒரு அணிக்கு 50க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர். போகப் போக இது பாதியானது. தற்போது மொத்த வீரர்கள் எண்ணிக்கை...

அதிர்ச்சி அளித்த முடிவு - விராத் கோஹ்லி

வெற்றி பெற வேண்டிய போட்டியை, கடைசி நேரத்தில் தென் ஆப்ரிக்க அணி "டிரா' செய்தது அதிர்ச்சியாக உள்ளது,'' என, இந்திய வீரர் விராத் கோஹ்லி தெரிவித்தார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஜோகனஸ்பர்க்கில் நடந்த முதல் டெஸ்ட், கடைசி நேரத்தில் "டிரா' ஆனது.  டுபிளசி அவுட்டான போது, தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு, 19 பந்தில் 16 ரன்கள் தேவைப்பட்டன. மூன்று விக்கெட் கைவசம் இருந்த போதும், வெற்றிக்கு...

சச்சின் கனவு பலிக்குமா?

சச்சின் கவனம், தற்போது கால்பந்து பக்கம் திரும்பியுள்ளது. வரும் 2022ல் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடருக்கு இந்தியா தகுதி பெறும் என, நம்பிக்கை தெரிவித்தார். வரும் 2017ல் உலக (17 வயதுக்குட்பட்டோர்) கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. இதன் மூலம், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) மிகப்பெரிய தொடரை முதல் முறையாக நடத்துகிறது.  இந்நிலையில், அடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கான தங்க கோப்பை இந்திய மக்களின்...

புஜாரா சதம் அடித்தது எப்படி?

தென் ஆப்ரிக்க மண்ணில் புஜரா சதம் அடிக்க, இந்தியா "ஏ' தொடர் தான் உதவியாக இருந்தது,'' என, பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் தெரிவித்தார். தென் ஆப்ரிக்க தொடருக்கு தயாராகும் விதத்தில், இந்திய "ஏ' அணி கடந்த ஆக., மாதம் அங்கு சென்றது.  இதன் கேப்டனாக புஜாரா இருந்தார். அதிகாரப்பூர்வமற்ற இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி தொடரை "டிரா' (1-1) செய்தது. இதில் பேட்டிங்கில் அசத்திய புஜாரா, தலா ஒரு சதம், அரைசதம் (137, 54 ரன்கள்) அடித்தார்....

கங்குலி கிரிக்கெட் அகாடமிக்கு தடை

வீரர்களின் வயதில் மோசடி காரணமாக, முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் அகாடமி உட்பட மொத்தம் 13 பயிற்சி மையங்களுக்கு, பெங்கால் கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) ஒரு ஆண்டு தடை விதித்தது. கோல்கட்டாவில், பெங்கால் கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) சார்பில், கடந்த செப்டம்பர் மாதம் ஜூனியர் (17 வயது) மற்றும் சப்-ஜூனியர் (14 வயது) அம்பர் ராய் கிரிக்கெட் தொடர் நடந்தது.  இதில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் பெங்கால் அணி...

சச்சினை நினைவுபடுத்திய கோஹ்லி

விராத் கோஹ்லியின் பேட்டிங்கை பார்க்கும் போது, எனக்கு சச்சின் தான் நினைவுக்கு வந்தார்,'' என, தென் ஆப்ரிக்க அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஆலன் டொனால்டு தெரிவித்தார். இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது.  முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியின் வேகப்புயல்கள் ஸ்டைன், மார்கல், பிலாண்டரை சமாளித்த விராத் கோஹ்லி, சதம் அடித்து அசத்தினார்.  தவிர, தென் ஆப்ரிக்க மண்ணில் களமிறங்கிய முதல் டெஸ்டில்...

கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பி.சி.சி.ஐ., சார்பில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் தேர்வு செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், ஆண்டுதோறும், சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்.  நடப்பு ஆண்டுக்கான இந்த விருதுக்கு, 1983ல் இந்தியாவுக்கு முதன்முறையாக உலக கோப்பை (50 ஓவர்) வென்று தந்த, முன்னாள் கேப்டன் கபில்தேவ் தேர்வு செய்யப்பட்டார்.  இவரை, பி.சி.சி.ஐ., தலைவர்...

பெங்களூரில் தெண்டுல்கர் உருவத்தில் பிரமாண்ட கேக்

கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கரின் முழு உருவத்தில் கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது.  கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் கேக் கண்காட்சிக்காக இது அமைக்கப்பட்டுள்ளது.  8 முதல் 10 பேர்கள் சேர்ந்து 5 தினங்களில் தெண்டுல்கரின் முழு உருவ கேக்கை வடிவமைத்துள்ளனர். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது...

பொங்கி எழுமா இளம் இந்தியா?

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை ஜோகனஸ்பர்க்கில் துவங்குகிறது. இதில், இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி சாதிக்க காத்திருக்கிறது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை ஜோகனஸ்பர்க் மைதானத்தில் துவங்குகிறது.  இங்கு இந்திய அணி பங்கேற்ற 3 டெஸ்டில், 2006ல் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1992, 1997ல் நடந்த டெஸ்ட் போட்டிகள் "டிரா' ஆகின. இம்முறை...

உலக கோப்பை கிரிக்கெட் - இந்தியா-பாகிஸ்தான் மோதல்

ஐ.சி.சி., உலக கோப்பை (19 வயதுக்குட்பட்டோருக்கான) தொடரில், "நடப்பு சாம்பியன்' இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), அடுத்த ஆண்டு பிப்., 14ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான 10வது ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.  இதில் தலா மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன....

ரஜினியின் பணிவை கண்டு வியந்தேன் - தெண்டுல்கர் புகழாரம்

தனியார் டி.வி. நடத்திய கருத்து கணிப்பில் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் குறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், அவரை சந்தித்ததில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அப்போது அவரது பணிவு மற்றும் தன்னடக்கத்தை பார்த்து வியப்படைந்தேன். அவரது நற்பண்புகளை உண்மையிலேயே பாராட்டுகிறேன். அவர் கிரிக்கெட் மீது ஆர்வம் மிக்க ரசிகர் என்பதை அறிந்து...

புத்துயிர் தந்த புரட்சி கேப்டன்

தோனி தொட்டதெல்லாம் பொன்னாகிறது. இவர், கேப்டனாக பொறுப்பேற்ற பின் இந்திய அணியின் வெற்றிநடை தொடர்கிறது. ஒருநாள் அரங்கில். இதுவரை 20 கோப்பைகள் வென்று,"சூப்பர்' கேப்டனாக ஜொலிக்கிறார். டெஸ்ட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறார். இந்திய அணி ஒருநாள் அரங்கில் 1974ல் காலடி எடுத்து வைத்தது. துவக்கத்தில் பலவீனமாக கருதப்பட்ட இந்திய அணி, கபில்தேவ், கவாஸ்கர் போன்ற வீரர்களின் வருகைக்குப் பின் சற்று எழுச்சி பெற்றது. முதல் பத்தாண்டுகளில் பங்கேற்ற 21 ஒருநாள்...

ஐ.சி.சி., ரேங்கிங் - விராத் கோஹ்லி பின்னடைவு

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய வீரர் விராத் கோஹ்லி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.  இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி (859 புள்ளி) முதலிடத்தில் இருந்து இரண்டாவது...

மழையால் தப்பியது இந்தியா

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இதனையடுத்து இந்திய அணி "ஹாட்ரிக்' தோல்வியில் இருந்து தப்பியது.  அபாரமாக ஆடிய தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக், கேப்டன் டிவிலியர்ஸ் சதம் அடித்தனர். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய தென் ஆப்ரிக்க அணி கோப்பை வென்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு...

ஹாக்கி - இந்தியா அவுட்

ஜூனியர் உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது இந்திய அணி. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் தென் கொரியாவுடன் "டிரா' செய்தது. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், 10வது ஜூனியர் ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர், டில்லியில் நடக்கிறது. "சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் லீக் போட்டியில் நெதர்லாந்திடம் தோற்றது. அடுத்து கனடாவை வீழ்த்திய இந்திய அணி, மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில், தென் கொரியாவை எதிர்கொண்டது.  இதில்...

தடுமாறும் மிடில் ஆர்டர் - சிக்கலில் ரெய்னா, யுவராஜ்

சமீபத்திய தோல்விகளுக்கு "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததே காரணம்,'' என, இந்திய கேப்டன் தோனி புகார் கூறினார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது. இதற்கு அணியின் "மிடில் ஆர்டர்' வீரர்கள் யுவராஜ் சிங், ரெய்னாவின் நிலையற்ற பேட்டிங்கும் ஒரு காரணம். யுவராஜ் சிங் இந்த ஆண்டு பங்கேற்ற 17 ஒருநாள் போட்டிகளில் 274 ரன்கள்...