இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. முதல் இரண்டு டெஸ்ட் முடிவில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
மூன்றாவது டெஸ்ட் கோல்கட்டாவில் நடந்தது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்திருந்தது. அஷ்வின் (83), ஓஜா (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு ஓஜா (3), ஆண்டர்சன் வேகத்தில் அவுட்டாக, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 247 ரன்களுக்கு "ஆல் அவுட் ஆனது. அஷ்வின் (91) அவுட்டாகாமல் இருந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 41 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இங்கிலாந்து அணிக்கு ஸ்டீவன் பின், ஆண்டர்சன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின் சுலப இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக்(1) ஏமாற்றினார். டிராட்(3) நிலைக்கவில்லை. பீட்டர்சன் "டக் அவுட்டானார். பின் வந்த பெல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு அஷ்வின் 2 விக்கெட், ஓஜா ஒரு விக்கெட் கைப்பற்றினர். காம்ப்டன் (9), பெல்(28) அவுட்டாகாமல் இருந்தனர்.
இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றது.
நல்ல பதிவு ஒரு தகவல் உங்கள் பதிவில்.
ReplyDeleteமிக்க நன்றி.
Australia Tamil News