கோல்கட்டா டெஸ்ட்: தோனி டக்-அவுட்


இங்கிலாந்துக்கு எதிரான கோல்கட்டா டெஸ்டின், இரண்டாவது இன்னிங்சில் தோனி "டக்-அவுட்டானார். தொடர்ச்சியாக விக்கெட்கள் சரிய, இந்திய அணி திணறுகிறது. 

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கின்றன. 

முதல் இரண்டு டெஸ்ட் முடிவில், இரு அணிகளும் 1-1 என, சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் கோல்கட்டாவில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 316 ரன்கள் எடுத்தது. 

மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுக்கு 509 ரன்கள் எடுத்திருந்தது. இன்று நான்காவது நாள் ஆட்டம் நடக்கிறது. விக்கெட்கள் தொடர்ச்சியாக சரிய, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 523 ரன்களுக்கு "ஆல்-அவுட்டானது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 203 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு சேவக், காம்பிர் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இவர்களின் சிறப்பான ஆட்டத்தால், அணியின் ஸ்கோர் நன்றாக உயர்ந்தது. சேவக் 49 ரன்களில் அவுட்டாகி, அரை சத வாய்ப்பை இழந்தார். 

பின் வந்த புஜாராவும், 8 ரன்களில் "ரன்-அவுட்டாகி, அதிர்ச்சி அளித்தார். நம்பிக்கை அளித்த காம்பிரும்(40) வெளியேறினார். "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

யுவராஜ்(11) விக்கெட்டை, ஆண்டர்சன் வீழ்த்தினார். தத்தளித்து கொண்டிருந்து நேரத்தில் களம் கண்ட தோனி "டக்-அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 

விக்கெட்கள் அடுத்தடுத்து சரிய, இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து திணறுகிறது. கோஹ்லி, அஷ்வின் களத்தில் உள்ளனர். 

0 comments:

Post a Comment