பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டார்.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி 2 "டுவென்டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய அணி நேற்று பி.சி.சி.ஐ., நேற்று வெளியிட்டது.
இந்திய அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் தொடர்நாயகன் விருது வென்று அசத்திய யுவராஜ் சிங் ஒருநாள் போட்டிக்கான அணியில் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் தேர்வு செய்யபட்டார்.
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த காரணத்தினால் அவருக்கு பதிலாக ரகானே வாய்ப்பு பெற்றார்.
மோசமான "பார்ம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், இத்தொடரிலும் இடம் பெறவில்லை. புவனேஷ்குமார், சமி அகமது ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். துவக்க வீரர் சேவக் ஒருநாள் போட்டிகளில் மட்டும் இடம் பிடித்துள்ளார்.
அணி விவரம்:
ஒருநாள்: தோனி(கேப்டன்), சேவக், காம்பிர், விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், இஷாந்த் சர்மா, ரகானே, அசோக் டிண்டா, புவனேஷ்வர் குமார், சமி அகமது, அமித் மிஸ்ரா.
"டுவென்டி-20: தோனி(கேப்டன்), காம்பிர், ரகானே, யுவராஜ் சிங், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், அசோக் டிண்டா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், பர்விந்தர் அவானா, பியுஸ் சாவ்லா, ராயுடு.
பெங்களூருவில் இந்திய வீரர்கள்
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது "டுவென்டி-20 போட்டியில் பங்கேற்பதற்காக, நேற்று இந்திய வீரர்கள் பெங்களூரு வந்தனர். விமான நிலையம் வந்த இவர்கள், பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாக்., வீரர்கள் பயிற்சி
பாகிஸ்தான் அணியினர் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பலத்த பாதுகாப்புடன் பயிற்சி மேற்கொண்டனர். காலை 10.50 மணிக்கு உடற்பயிற்சியுடன் துவக்கினர். பின் இவர்கள், பயிற்சியாளர் தேவ் வாட்மோர் முன்னிலையில் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர்.
கேப்டன் முகமது ஹபீஸ், சயீத் அஜ்மல், அப்ரிதி, உமர் குல், கம்ரான் அக்மல், உமர் அக்மல், மாலிக் உள்ளிட்டோர் "கேட்ச் மற்றும் "பீல்டிங் பயிற்சி மேற்கொண்டனர்.
0 comments:
Post a Comment