இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் கங்குலி

இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளெட்சரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.  அவரது தலைமையில் குறிப்பிடத்தக்க வெற்றியை இந்திய அணி பெறவில்லை. தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.  அவரது பயிற்சி திருப்தி பெரும்பாலான வீரர்களுக்கு அளிக்காததால், அவரது பதவிக்காலத்தை பி.சி.சி.ஐ. நீட்டிக்காது என்று தெரிகிறது.  இதற்கிடையே சென்னையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது.  இதையடுத்து...

தோனி சதம் வீண் - இந்தியா தோல்வி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதம் அடித்து அசத்திய கேப்டன் தோனியின் போராட்டம் வீணானது. இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பெய்துவரும் மழை காரணமாக, மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. இதனால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது....

T20 ரேங்கிங் - கோஹ்லி 5வது இடம்

சர்வதேச "டுவென்டி-20' பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் விராத் கோஹ்லி ஐந்தாவது இடம் பெற்றார். இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மற்றும் தென் ஆப்ரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதிய "டுவென்டி-20' தொடர் முடிந்தது.  இதையடுத்து வெளியிடப்பட்ட "டுவென்டி-20' பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராத் கோஹ்லி, ஐந்து இடங்கள் முன்னேறி, முதன் முறையாக ஐந்தாவது (731 புள்ளி) இடம் பெற்றார்.  ரெய்னா (719) 8வது இடத்திலுள்ளார். 6 இடங்கள் முன்னேறிய யுவராஜ்...

முதல் முறையாக இந்தியாவிற்கு நம்பர்-1 வாய்ப்பு

ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணிக்கு "நம்பர்-1' இடம் பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) அணிகளுக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து (121 புள்ளி) முதலிடத்திலும், தென் ஆப்பரிக்கா (121) இரண்டாவது இடத்திலும், இந்தியா (120) மூன்றாவது இடத்திலும் உள்ளன.  தற்போது இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது.  இதன் முதல் போட்டி சென்னையில் நாளை துவங்குகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் ஒருபுள்ளி பெற்று 121 புள்ளி பெற்று முதல் முறையாக முதலிடத்திற்கு...

கேப்டன் தோனிக்கு ஓய்வு

கேப்டனாக தோனிக்கு ஓய்வு கொடுக்கலாம். இவருக்கு பதிலாக விராத் கோஹ்லியை புதிய கேப்டனாக நியமிக்கலாம் என,'' இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்தார். சமீப காலமாக தோனியின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. இவரது தலைமையில் இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. இதையடுத்து இவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து கவாஸ்கர் கூறியது: டெஸ்ட், ஒருநாள் போட்டி, "டுவென்டி-20'...

ரூ. 300 டிக்கெட் "பிளாக்கில்' ரூ. 2,500 - ஆமதாபாத் போட்டிக்கு ஆர்வம்

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் "டுவென்டி-20' போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற, ரசிகர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரூ. 300 மதிப்புள்ள டிக்கெட், கள்ளச்சந்தையில் ரூ. 2,500க்கு விற்கப்படுகிறது. இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.  பெங்களூருவில் நடந்த முதல் போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி, நாளை ஆமதாபாத்தில்...

ரசிகர்களுக்கு கண்ணீர் நன்றி - சச்சின் உருக்கம்

ரசிகர்களின் அன்பை நினைத்து, என் கண்களில் கண்ணீர் வந்தது'' என, சச்சின் உருக்கத்துடன் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை வீரர் சச்சின், 39. ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தார்.  தற்போது, குடும்பத்துடன், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலமான முசவுரியில் ஓய்வு எடுத்து வரும் இவர் சமூக வலைதளமான "டுவிட்டரில்' கருத்து தெரிவித்துள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது: இத்தனை ஆண்டுகளாக, எனக்கு ஆதரவும், அன்பும் அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை.  குறிப்பாக...

எதிர்ப்புக்கு இடையே மோதல் - இன்று இந்தியா-பாக்., T20

பல்வேறு எதிர்ப்புகளை கடந்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. பெங்களூருவில் நடக்கும் முதலாவது "டுவென்டி-20' போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி அசத்தல் வெற்றி பெற காத்திருக்கிறது. கடந்த 2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு பின் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டித் தொடர் நடக்கவே இல்லை. உலக கோப்பை போன்ற பல நாடுகள் பங்கேற்கும் தொடரில் மட்டும் இரு அணிகளும் மோதின.  மீண்டும் போட்டி: ஐந்து ஆண்டுகளுக்குப்...

தோனி மீண்டும் கேப்டன்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டார்.  இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி 2 "டுவென்டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய அணி நேற்று பி.சி.சி.ஐ., நேற்று வெளியிட்டது.  இந்திய அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் தொடர்நாயகன் விருது வென்று அசத்திய யுவராஜ் சிங் ஒருநாள் போட்டிக்கான அணியில் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின்...

ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் சச்சின்

இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய வீரர் சச்சின் ஓய்வு பெற்றார்.  இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கடந்த 1973ல் மும்பையில் பிறந்தார். 1989ம் ஆண்டு, 16 வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.  கடந்த 23 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்த சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 34,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற...

ஆறாவது ஐ.பி.எல் தொடர் எப்போது?

ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர், அடுத்த ஆண்டு ஏப்., 3ம் தேதி கோல்கட்டாவில் ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் "நடப்பு சாம்பியன் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் ஆண்டு தோறும் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.  அடுத்த ஆண்டுக்கான 6வது ஐ.பி.எல்., தொடர், ஏப். 3ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில்...

யுவராஜ் ஆல்-ரவுண்டராக அசத்தல்

முதலாவது "டுவென்டி-20 போட்டியில் யுவராஜ் சிங் "ஆல்-ரவுண்டராக அசத்த, இந்திய அணி, இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட "டுவென்டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புனேயில் உள்ள சுப்ரதா ராய் சகாரா மைதானத்தில் நேற்று நடந்தது. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங் தேர்வு செய்தார். ஹேல்ஸ் அரைசதம்:  இங்கிலாந்து...

இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் போட்டிக்கான நேரம் மாற்றம்

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் நான்கு ஒருநாள் போட்டிகள் துவங்கும் நேரத்தை பி.சி.சி.ஐ., மாற்றியது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி, அடுத்த ஆண்டு ஜன. 11ம் தேதி ராஜ்கோட்டில் நடக்கவுள்ளது.  பின், கொச்சி (ஜன. 15), ராஞ்சி (ஜன. 19), மொகாலி (ஜன. 23), தர்மசாலா (ஜன. 27) ஆகிய நகரங்களில் நடக்கவுள்ளது. முதல் நான்கு போட்டிகள் பகலிரவு போட்டியாகவும், கடைசி போட்டி பகல் போட்டியாகவும் நடத்தப்படுகிறது. வழக்கமாக, இந்தியாவில் பகலிரவு போட்டிகள் மதியம் 2.30 மணிக்கு துவங்கப்படும்....

இந்திய-பாக்., தொடர் நடக்குமா?

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடக்கும். இதை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை,' என, பி.சி.சி.ஐ., தெரிவித்தது. இரண்டு "டுவென்டி-20', மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் அணி 22ம் தேதி இந்தியா வருகிறது. பெங்களூருவில், முதல் "டுவென்டி-20' போட்டி (டிச., 25) நடக்கிறது.  இதனிடையே, இந்தியா வந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறுகையில்,"" நமது உள்துறை அமைச்சர்...

தோனிக்கு பதில் கோஹ்லி - கேப்டனை மாற்ற நேரம் வந்தாச்சு

தோனிக்குப்பதில் கேப்டன் பதவியில் விராத் கோஹ்லியை அமர்த்த நேரம் வந்துவிட்டது,'' என, கவாஸ்கர் தெரிவித்தார். டெஸ்ட் அரங்கில் தோனி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் 8 போட்டிகளில் தோற்றது.  தற்போது இந்திய மண்ணிலும் இங்கிலாந்திடம் தொடரை இழந்துள்ளது. இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நாக்பூர் டெஸ்டில் சதம் அடித்து அசத்திய இளம் விராத்...

பணம், பதவி, பகட்டு - இந்திய தோல்விக்கு காரணம் என்ன?

டெஸ்ட் போட்டி மீதான ஆர்வம் இந்திய வீரர்களுக்கு சுத்தமாக இல்லை. பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., தொடருக்கு தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.  கேப்டன் பதவியை பிடிக்க மோதல், அணியில் ஒற்றுமையின்மை, தவறான வீரர்கள் தேர்வு போன்றவை அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற அணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், இந்திய அணியால் மட்டும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடிவதில்லை.  முன்பு...

இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருகிற 25–ந்தேதி முதல் ஜனவரி 6–ந்தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.  இதற்காக பாகிஸ்தான் வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்திய தொடர் குறித்து பாகிஸ்தான் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் மிஸ்பா உல்–ஹக் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணியில் திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களால், இந்திய...