காம்பிர் அணி பரிதாப தோல்வி!

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் காம்பிர் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி, விக்டோரியன் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.

உள்ளூர் "டுவென்டி-20' தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற 12 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த "டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் டில்லி டேர்டெவில்ஸ், ஆஸ்திரேலியாவின் விக்டோரியன் புஷ்ரேஞ்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டில்லி அணி கேப்டன் காம்பிர், பேட்டிங் தேர்வு செய்தார்.

விக்கெட் மடமட:
ஹார்வுட் வீசிய முதல் ஓவரில் சேவக் இரண்டு பவுண்டரி விளாசினார். இதற்கு பின் டில்லி அணி தடுமாறியது. காம்பிர் 4 ரன்களுக்கு ஹார்வுட் "வேகத்தில்' வீழ்ந்தார். கிளின்ட் மெக்கே பந்தில் சேவக்(21) வெளியேறினார். ஓவேஸ் ஷா "டக்' அவுட்டானார். அவசரப்பட்ட தினேஷ் கார்த்திக்(6) ரன் அவுட்டானார். இதையடுத்து 8 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 47 ரன் எடுத்து தத்தளித்தது

மன்ஹாஸ் ஆறுதல்:
பின்னர் தில்ஷன், மன்ஹாஸ் இணைந்து அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர். தில்ஷன் 18 ரன்கள் எடுத்தார். பொறுப்பாக ஆடிய மன்ஹாஸ் 25 ரன்களுக்கு, ஹார்வுட் பந்துவீச்சில் போல்டானார். "டெயிலெண்டர்களும்' ஏமாற்ற, டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 98 ரன்கள் மட்டும் எடுத்தது.
விக்டோரியன் சார்பில் அபாரமாக பந்துவீசிய மெக்கே 3 விக்கெட் வீழ்த்தினார்.

குயினி அசத்தல்:
சுலப இலக்கை விரட்டிய விக்டோரியன் அணிக்கு குயினி "சூப்பர்' துவக்கம் தந்தார். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்த போதும், நெஹ்ரா, நான்ஸ் உள்ளிட்ட டில்லி அணி பவுலர்கள் ஏமாற்றினர். அதிரடியாக ஆடிய குயினி, சிக்சர் மழை பொழிந்தார். இவர் 40 ரன்களுக்கு(4 பவுண்டரி, 3 சிக்சர்) அமித் மிஸ்ரா சுழலில் வெளியேறினார். ஹாட்ஜ்(9), டேவிட் ஹசி(7) ஏமாற்றினர். பின்னர் அசத்தலாக ஆடிய ஒயிட்(22*), பிலிஜார்ட்(15) இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். பாட்டியா பந்தில் பிலிஜார்ட் ஒரு இமாலய சிக்சர் அடிக்க, விக்டோரியன் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் கலக்கிய மெக்கே ஆட்ட நாயகன் விருதை
தட்டிச் சென்றார்.

-------
ஸ்கோர் போர்டு

டில்லி டேர்டெவில்ஸ்

காம்பிர்(ப)ஹார்வுட் 4(8)
சேவக்(கே)+(ப)மெக்கே 21(15)
தில்ஷன்(ப)மெக்கே 18(26)
ஓவேஸ் ஷா(கே)வேட்(ப)மெக்கே 0(5)
கார்த்திக்-ரன் அவுட்-(ஒயிட்) 6(7)
மன்ஹாஸ்(ப)ஹார்வுட் 25(34)
பாட்டியா(ப)மெக்டொனால்டு 8(9)
மிஸ்ரா-அவுட் இல்லை- 7(14)
சங்வான்(ப)மெக்டொனால்டு 1(2)
உதிரிகள் 8
மொத்தம்(20 ஓவரில் 8 விக்.,) 98
விக்கெட் வீழ்ச்சி: 1-17(காம்பிர்), 2-31(சேவக்), 3-41(ஓவேஸ் ஷா), 4-47(கார்த்திக்), 5-76(தில்ஷன்), 6-84(மன்ஹாஸ்), 7-96(பாட்டியா), 8-98(சங்வான்).
பந்துவீச்சு: ஹார்வுட் 4-0-20-2, சிடில் 4-0-21-0, மெக்கே 4-0-17-3, மெக்டொனால்டு 4-0-17-2, ஹாலந்து 3-0-10-0, டேவிட் ஹசி 1-0-9-0.

விக்டோரியன் அணி
குயினி(ப)மிஸ்ரா 40(33)
ஹாட்ஜ்(ப)தில்ஷன் 9(16)
ஒயிட்-அவுட் இல்லை- 22(23)
டேவிட் ஹசி(ப)பாட்டியா 7(13)
பிலிஜார்ட்-அவுட் இல்லை- 15(16)
உதிரிகள் 7
மொத்தம்(16.4 ஓவரில் 3 விக்.,) 100
விக்கெட் வீழ்ச்சி: 1-55(குயினி), 2-55(ஹாட்ஜ்), 3-78(டேவிட் ஹசி).
பந்துவீச்சு: நெஹ்ரா 3-0-20-0, நான்ஸ் 3-0-17-0, மிஸ்ரா 4-0-30-1, தில்ஷன் 4-0-14-1, பாட்டியா 2.4-0-18-1

0 comments:

Post a Comment