ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது குறித்து கங்குலி கூறியது: வதோதராவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி போராடி தான் தோல்வி அடைந்துள்ளது. ஒரு சில தவறுகளை திருத்திக் கொண்டால், நாக்பூரில் நாளை நடக்க உள்ள இரண்டாவது போட்டியில் சாதிக்கலாம்.
பேட்டிங் ஆர்டரை பலப்படுத்தும் நோக்கில், கேப்டன் தோனி 3 வது வீரராக களமிறங்குவது நல்லது. அதிரடியாக ஆடக் கூடிய தோனிக்கு, பேட்டிங் செய்ய அதிக ஓவர்கள் தேவை. அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எழுச்சியுடன் செயல்படுவது அவசியம்.
யுவராஜ் அணிக்கு திரும்பும் பட்சத்தில், ரவிந்திர ஜடேஜாவுக்குப் பதில் விராத் கோஹ்லியை தேர்வு செய்யலாம்.
முதல் போட்டியில் ஏமாற்றம் அளித்த சச்சின், நாக்பூரில் அசத்துவார் என எதிர்பார்க்கிறேன். ஹர்பஜன் சுழற் பந்து வீச்சில் அசத்தினால், எளிதில் வெற்றியை எட்டலாம். இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment