வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட ஆசை

எனது வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன்; ஆனால் எனது உடல்தான் ஒத்துழைக்க மறுக்கிறது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப் கூறினார்.

இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:

நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். ஆனால் எனக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு விளையாட முடியாமல் போய்விடுகிறது. நான் 13 வயது முதலே காயங்களால் அவதிப்பட்டு வருகிறேன். இத்தனை வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் என்னால் எப்படி விளையாட முடிந்தது என்று தெரியவில்லை.

இன்னொரு முறை காயம் ஏற்பட்டால் எனது கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான். முடிந்துவிட்டது என்ற எண்ணிக் கொள்ளலாம்.

கிரிக்கெட் விளையாட மனம் சொல்கிறது. ஆனால் எனது உடல் ஒத்துழைக்க மறுக்கிறது என்றார் அவர்

0 comments:

Post a Comment