சாலஞ்சர் டிராபி தொடரின் முதல் போட்டியில், தோனி தலைமையிலான இந்தியா "புளூ' அணி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது.
உள்ளூர் என்.கே.பி., சால்வி சாலஞ்சர் டிராபி கிரிக்கெட் தொடர் நாக்பூரில் நேற்று துவங்கியது. இதில், இந்தியா புளூ, ரெட், கிரீன் என மூன்று அணிகள் மோதுகின்றன. நேற்று நடந்த போட்டியில், பத்ரிநாத் தலைமையிலான இந்திய "ரெட்' அணி, தோனி தலைமையிலான இந்திய "புளூ' அணியுடன் மோதியது. டாஸ் ஜெயித்த இந்தியா "ரெட்' அணி, பேட்டிங் தேர்வு செய்தது.
அதிரடி துவக்கம்:
இந்தியா "ரெட்' அணிக்கு தவான், முரளி விஜய் துவக்கம் தந்தனர். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது. 4 பவுண்டரி 2 சிக்சர் விளாசிய விஜய், 44 ரன்களுக்கு அவுட்டானார். தவான் (39) ஆறுதல் அளித்தார். கேப்டன் பத்ரிநாத் (4) ஏமாற்றினார்.
ஜாக்கி அரை சதம்:
பின்னர் கடிவாலே, ஜாக்கி இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடிவாலே (55), அரை சதம் கடந்து பெவிலியன் திரும்பினார். ஜாக்கி, 54 ரன்கள் சேர்த்து அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா (22), சஹா (1), அஸ்வின் (11), இஷாந்த் (1) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 44.4 ஓவரில் ஆல்-அவுட்டான இந்தியா "ரெட்' அணி 248 ரன்கள் எடுத்தது.
குமார் அசத்தல்:
எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இந்தியா "புளூ' அணி, நமன் ஓஜா (8) விக்கெட்டை விரைவில் இழந்தது. ஜாபர் (27), ஹர்பஜன் (36) ஆறுதல் அளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த தோனி, சுரேஷ் குமார் ஜோடி பொறுப்புடன் ஆடியது. தோனி 37 ரன்கள் சேர்த்தார். நிதானமாக ஆடிய குமார் அரை சதம் கடந்தார். இவர் 87 ரன்கள் அடித்து அசத்தினார்.
யூசுப் பதான் (15), ஸ்ரீசாந்த் (0) சொதப்பினர். பரபரப்பான இறுதி கட்டத்தில், டின்டா (8*), திரிவேதி (4*) கைகொடுத்தனர். இந்திய "புளூ' அணி 49.3 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் 4 புள்ளிகள் பெற்றது.
--------------------------
ஸ்கோர் போர்டு
இந்தியா "ரெட்'
தவான் (கே) ஓஜா (ப) திரிவேதி 39 (39)
விஜய் (கே) ஓஜா (ப) ஹர்பஜன் 44 (35)
கடிவாலே (கே) ஜாதவ் (ப) டின்டா 55 (51)
பத்ரிநாத் ரன் அவுட் (திரிவேதி) 4 (10)
ஜாக்கி (கே) ஓஜா (ப) யூசுப் 54 (51)
ஜடேஜா எல்.பி.டபிள்யு.,(ப) ஹர்பஜன் 22 (38)
சஹா (கே) யூசுப் (ப) தோனி 1 (9)
அஸ்வின் (கே) குமார் (ப) டின்டா 11 (20)
முனாப் (ப) ஹர்பஜன் 7 (13)
இஷாந்த் (கே) ஓஜா (ப) டின்டா 1 (3)
தியாகி -அவுட் இல்லை- 0 (0)
உதிரிகள் 10
மொத்தம் (44.4 ஓவரில் ஆல்-அவுட்) 248
விக்கெட் வீழ்ச்சி: 1-79 (விஜய்), 2-99 (தவான்), 3-118 (பத்ரிநாத்), 4-167 (கடிவாலே), 5-212 (ஜாக்கி), 6-218 (சஹா), 7-231 (ஜடேஜா), 8-242 (அஸ்வின்), 9-244 (இஷாந்த்), 10-248 (முனாப்).
பந்து வீச்சு: ஸ்ரீசாந்த் 7-1-44-0, டின்டா 8-0-52-3, ஹர்பஜன் 8.4-0-40-3, யூசுப் 8-1-42-1, திரிவேதி 8-0-43-1, சக்சேனா 2-0-12-0, தோனி 3-0-14-1.
இந்தியா "புளூ'
ஓஜா (கே) ஜாக்கி (ப) இஷாந்த் 8 (16)
ஜாபர் (கே) தவான் (ப) தியாகி 27 (33)
ஹர்பஜன் (ப) ஜடேஜா 36 (36)
ஜாதவ் (கே) ஜடேஜா (ப) இஷாந்த் 1 (8)
சுரேஷ் குமார் (கே) ஜடேஜா (ப) இஷாந்த் 87 (113)
தோனி (கே) அஸ்வின் (ப) இஷாந்த் 37 (40)
சக்சேனா (கே) கடிவாலே (ப) அஸ்வின் 15 (22)
யூசுப் (கே) விஜய் (ப) ஜடேஜா 15 (15)
ஸ்ரீசாந்த் (ப) முனாப் 0 (2)
டின்டா -அவுட் இல்லை- 8 (7)
திரிவேதி -அவுட் இல்லை- 4 (6)
உதிரிகள் 12
மொத்தம் (49.3 ஓவரில் 9 விக்கெட்) 250
விக்கெட் வீழ்ச்சி: 1-31 (ஓஜா), 2-48 (ஜாபர்), 3-49 (ஜாதவ்), 4-106 (ஹர்பஜன்), 5-161 (தோனி), 6-192 (சக்சேனா), 7-226 (யூசுப்), 8-237 (சுரேஷ் குமார்), 9-237 (ஸ்ரீசாந்த்).
பந்து வீச்சு: முனாப் 9.3-0-58-1, தியாகி 8-0-49-1, இஷாந்த் 10-1-56-4, ஜடேஜா 10-0-36-1, அஸ்வின் 10-2-33-1, பத்ரிநாத் 2-0-9-0.
---------
அபராதம்
ராஞ்சி: பதிவு செய்யப்படாத காரை ஓட்டிச் சென்ற இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனிக்கு, ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன், ஒரு கோடி மதிப்பிலான "ஹம்மர்-ஹெச் 2' காரை வாங்கினார் தோனி. ஆனால் அதை இதுவரை பதிவு செய்ய வில்லை. சாலஞ்சர் டிராபி தொடரில் பங்கேற்க நேற்று முன்தினம் ராஞ்சியிலிருந்து, நாக்பூர் வந்தார். அப்போது பதிவு செய்யப்படாத தோனியின் காரை மாநில போக்குவரத்து துறை, மடக்கி அபராதம் விதித்தது.
0 comments:
Post a Comment