இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டிகளைத் துவங்கவேண்டும் என்று பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ்கான் கூறினார்.
கராச்சியில் வியாழக்கிழமை விளையாட்டு உபகரணங்கள் கடையைத் துவக்கிவைத்த பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே உடனடியாக இந்தியாவுடன், கிரிக்கெட் போட்டிகளைத் துவங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) அதிகாரிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இஜாஸ் பட் சந்தித்துப் பேசவுள்ளார். இது ஒரு நல்ல அறிகுறி.
அவர் பாகிஸ்தான் திரும்பி வரும்போது இந்திய அதிகாரிகளிடமிருந்து நல்ல செய்தியைப் பெற்று வருவார் என எதிர்பார்க்கிறேன்.
இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடும்போது அந்த நாட்டுடன் நல்ல நட்புறவு வளரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவுடன் கிரிக்கெட் தொடர் என்பதே முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிதான். இதை எதனுடனும் ஒப்பிடமுடியாது என்றார் அவர்.
0 comments:
Post a Comment