மீள்வதற்கு வாய்ப்புள்ளது: தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதலில் பின்னடைவை சந்தித்தாலும், மீண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது,'' என தோனி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியது:

ஏழு போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் முதலில் சில ஆட்டங்களில் சரியாக விளையாடாவிட்டாலும், பின் மீண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரம் 4 அல்லது 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து விட்டால், தொடர் நம் கையை விட்டுப் போய்விடும்.

தீவிரமான பயிற்சியின் போது சிறு காயங்கள் ஏற்படுவது இயற்கைதான். இதனால் பயப்படத் தேவையில்லை. அனைத்து வீரர்களும் உடற்தகுதியுடன் உள்ளோம். ஆனால் அதிர்ஷ்டமில்லாத வீரர்கள் தான் குறுகிய இடைவெளியில் காயமடைகின்றனர்.

இதனால் தான் நாம் பகுதி நேர பந்து வீச்சாளர்களை நம்பவேண்டியுள்ளது. ஆடும் லெவனில் இடம் பெறும் வீரர்கள் குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் யுவராஜ் சிங்< இரண்டாவது போட்டியில் நிச்சயம் பங்கேற்பார்.

கடந்த டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் "ரிவர்ஸ் சுவிங்' செய்து அசத்தினர். சுழல் பந்து மற்றும் "பார்ட் டைம்' பவுலர்களும் விக்கெட்டுகளை சாய்த்தனர். ஆனால் ஒருநாள் போட்டி முற்றிலும் வித்தியாசமானது.

இந்த தொடரில் "ஆல் ரவுண்டர்கள்' தான் முக்கிய பங்கு வகிப்பார்கள். சிறந்த "ஆல் ரவுண்டர்கள்' இருந்தால், ஐந்து ஸ்பெஷல் பவுலர்களுடன் களமிறங்கலாம்.

சாம்பியன்ஸ் லீக் தொடரால் ஆஸ்திரேலிய வீரர்கள் நல்ல அனுபவம் பெற்றுள்ளனர். ஆனால் ஓயாத கிரிக்கெட்டால் அவர்கள் சோர்வடைந்தும் உள்ளனர். ரேங்கிங் குறித்து கவலைப்படாமல் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment