தோனிக்கு கில்கிறிஸ்ட் "அட்வைஸ்'

இந்திய கேப்டன் தோனி, "டாப்-ஆர்டரில்' பேட்டிங் செய்ய வேண்டும்,'' என ஆலோசனை அளித்துள்ளார் கில்கிறிஸ்ட்.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க, கேப்டன் தோனி மூன்றாவது வீரராக களமிறங்க வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். இதே கருத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்டும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது:

இந்திய கேப்டன் தோனி அதிரடி ஆட்டக்காரர். ஒரு நாள் போட்டிகளில் அவர் டாப்-ஆர்டரில் களமிறங்குவது அணிக்கு பலம் அளிக்கும். மிகச் சிறந்த வீரரான அவர், அதிக ஓவர்கள் விளையாட வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவர்.



யுவராஜ் பலம்:

வதோதராவில் நடந்த முதல் போட்டியில், காயம் காரணமாக யுவராஜ் பங்கேற்காதது இந்திய அணிக்கு துரதிருஷ்டம். ஆனால் இன்று நாக்பூரில் நடக்க உள்ள இரண்டாவது போட்டியில் யுவராஜ் களமிறங்குவார் என எதிர்பார்க்கிறேன். அவர் பங்கேற்பது இந்திய அணியின் பேட்டிங்கை மேலும் பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. உலகின் இரண்டு முன்னணி அணிகள் மோதும் இத்தொடரில் முன் கூட்டியே முடிவை நிர்ணயிக்க முடியாது.



தவறான முடிவு:

இந்திய தேர்வாளர்கள் ரோகித் சர்மாவை அணியில் இருந்து புறக்கணித்தது தவறான முடிவு. அவர் திறமையான வீரர். அணியில் வளர்ந்து வரும் வீரர்.



வழிகாட்டி:

கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு அதிக போட்டிகளில் பங்கேற்பதே காரணம் என கருதுகிறேன். ஆனால் ஆஸ்திரேலிய அணி இப்பிரச்னையில் மிகவும் எச்ரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பாண்டிங், ஜான்சன் போன்ற வீரர்கள் இரண்டாவது ஐ.பி.எல்., தொடரை புறக்கணித்தனர். இது நல்ல முடிவு. மற்ற வீரர்களும் அதிக போட்டிகளில் பங்கேற்பதை தவிர்ப்பதால், காயத்திலிருந்து தப்பிக்கலாம். இவ்வாறு கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.
--------------------


தோனி மறுப்பு

கில்கிறிஸ்ட் மற்றும் கங்குலியின் ஆலோசனைக்கு பதில் அளித்த தோனி கூறுகையில்,"" மூன்றாவது வீரராக எப்போதும் களமிறங்குவது என்பது முடியாத காரியம். சச்சின், சேவக் துவக்க வீரர்களாக விளையாடுகின்றனர். 3 வது வீரராக காம்பிர், 4 வது வீரராக யுவராஜ் உள்ளனர். 5 வது இடம் தான் காலியாக உள்ளது. பேட்டிங் ஆர்டரை நிரந்தரமாக நான் வைத்துக் கொள்வதில்லை. ஆட்டத்தின் சூழ்நிலை மற்றும் பவுலர்களை அடிப்படையாக வைத்து தான் இதனை முடிவு செய்ய முடியும்,'' என்றார்.

0 comments:

Post a Comment