சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 200 விக்கெட் மற்றும் 1,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ஹர்பஜன் சிங் புரிந்தார்.
வதோதராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 1,000 ரன்களை ஹர்பஜன் எட்டினார். 200 விக்கெட்டுகளை அவர் முன்னதாகவே வீழ்த்தியிருந்தார்.
200 விக்கெட்டுகள், 1,000 ரன்கள் எடுக்கும் 3-வது இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்பஜன் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே இந்தச் சாதனையை கபில்தேவ், அஜித் வடேகர் ஆகியோர் செய்துள்ளனர்.
போட்டியில் பதிவான மற்ற சாதனைகள் வருமாறு:
இந்த ஆட்டத்தில் 73 ரன் குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஹசி ஒரு தின ஆட்டத்தில் தனது 25-வது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். மேலும் இந்தியாவுக்கு எதிராக தனது அதிகபட்ச ரன்களையும் அவர் எடுத்தார். இதற்கு முன் 2009, செப்டம்பர் 28-ல் செஞ்சுரியனில் நடந்த ஆட்டத்தில் அவர் இந்தியாவுக்கு எதிராக 67 ரன்கள் எடுத்திருந்தார்.
வீரேந்திர சேவாக் விக்கெட்டை எடுத்ததன் மூலம் இந்தியாவுக்கு எதிராக மட்டும் ஒரு நாள் போட்டியில் 50 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையை பிரெட் லீ பெற்றார்.
இஷாந்த் சர்மா ஒரு நாள் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை (3வி-50) பதிவு செய்தார். மேலும் ஒரு நாள் போட்டிகளில் அவர் தனது 50-வது விக்கெட்டையும் எடுத்தார்.
ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் ஹோப்ஸ் ஒரு நாள் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்தார்.
கெüதம் கம்பீர் ஒரு நாள் ஆட்டத்தில் 17-வது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் எடுக்கும் முதல் அரை சதமாகும் இது. இதற்கு முன் 2008 பிப்ரவரியில் சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 113 ரன்கள் எடுத்திருந்தார்.
ஒரு நாள் போட்டிகளில் பிரவீண்குமாரின் அதிகபட்ச (32 பந்துகளில் 40) ரன்னாகும் இது.
8-வது விக்கெட்டுக்கு ஹர்பஜன் - பிரவீண்குமார் சேர்ந்து எடுத்த 84 ரன்கள் இந்திய அணியின் அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன் 1987-ல் பெங்களூரில் கபில்தேவும் - கிரண் மோரேவும் கூட்டாக 82 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாகும்.
மைக்கேல் ஹசி ஒரு நாள் போட்டியில் 8-வது ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
வதோதராவில் இந்தியாவுக்கு எதிராக நடந்த 2 ஒரு தின ஆட்டங்களையும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது
0 comments:
Post a Comment