ஐபிஎல் கிரிக்கெட் அணிகளுள் ஒன்றை மலையாள நடிகர் மோகன்லால் வாங்கவுள்ளார். கொச்சியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் கேரள மாநில தட களத்தின் நல்லெண்ணத் தூதராக மோகன்லால் தேர்வு செய்யப்பட்டார். விழாவின் முடிவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தட கள விளையாட்டின் நல்லெண்ணத் தூதராக நியமித்து என்னை விளையாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் கல்லூரியில் படிக்கும்போதே நான் மல்யுத்த வீரன் என்பது பலருக்குத் தெரியாது. நானும், இயக்குநர் பிரியதர்ஷனும் இணைந்து ஐபிஎல் அணியை வாங்கப் போவதாக செய்துள்ளன. அது உண்மைதான். ஏலத்தின் மூலம் ஐபிஎல் அணியை வாங்கப் போகிறேன்....