கோப்பை வெல்லுமா இந்திய அணி?

ஐ.பி.எல்., தொடரில் சாம்பயின் பட்டம் வென்ற உற்சாகத்தில், "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சாதிக்க தயாராகிறார் இந்திய கேப்டன் தோனி.

அதிரடிக்கு ரெய்னா, முரளி விஜய், வேகத்துக்கு ஜாகிர் கான், சுழலுக்கு ஹர்பஜன் என நிறைய திறமைசாலிகள் இருப்பதால், மீண்டும் ஒரு முறை கோப்பை கைபற்ற இந்திய அணி காத்திருக்கிறது.

முதல் பெருமை

கடந்த 2007ல் நடந்த முதலாவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் பைனலில், பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி,கோப்பை வென்று சாதித்தது. கபில்தேவுக்கு (1983, 60 ஓவர் போட்டி) பின் உலக கோப்பை பெற்று தந்த, முதல் கேப்டன் என்ற பெருமை தோனிக்கு கிடைத்தது.

இரண்டாவதாக இங்கிலாந்தில் (2009) நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி "சூப்பர்-8' சுற்றுடன் வெளியேறியது. ஆனால் இம்முறை சாதிக்க காத்திருக்கிறது இந்திய அணி. இந்த முறை இந்திய அணி ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்க அணியுடன் பிரிவு "சி' யில் இடம் பெற்றுள்ளது. இதனால் சூப்பர்-8 சுற்றுக்கு இந்திய அணி எளிதாக முன்னேறி விடும்.

ரெய்னா மிரட்டல்

"டுவென்டி-20' உலககோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி, முழு பலத்துடன் உள்ளது. காயம் காரணாக துவக்க வீரர் சேவக் இல்லாதது ஏமாற்றம் தான். ஆனால் இவருக்குப் பதில் தேர்வு செய்யப்பட்டுள்ள முரளி விஜய், சூப்பர் பார்மில் உள்ளார். மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் இவரது அபார ஆட்டம், சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது.

இந்திய அணியின் மற்றொரு முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னா. ஐ.பி.எல்., தொடரில், அசத்திய ரெய்னா 520 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இவரது அதிரடி மிரட்டல், உலக கோப்பையில் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. இவர் தவிர, காம்பிர், ரோகித் சர்மா, தோனி, யூசுப் பதான், தினேஷ் கார்த்திக், ரவிந்திர ஜடேஜா என அணியின் பேட்டிங் வரிசை எதிரணிகளை மிரட்டுகிறது.

அறிமுக அசத்தல்

கடந்த முறை இந்திய அணியின் பவுலிங் பெரும் ஏமாற்றம் அளித்தது. ஆனால் இம்முறை ஜாகிர் கான் முழு பலத்துடன் களமிறங்குகிறார். அறிமுக வீரராக, ஐ.பி.எல்., தொடரில் அசத்திய வினய் குமார் இடம் பெறுகிறார்.

இவர்களுடன் பிரவீண் குமார், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரும் வேகத்தில் அசத்த உள்ளார். சுழலுக்கு ஒத்துழைக்கும் கரீபிய மண்ணில் ஹர்பஜன், பியுஸ் சாவ்லா மிரட்ட உள்ளனர். இவர்கள் தவிர, "பார்ட் டைம்' பவுலர்கள் ரெய்னா, யூசுப் பதான், யுவராஜ் போன்றவர்களும் சாதித்தால் இந்திய அணி எளிதில் சாதிக்கலாம்.

கைகொடுப்பாரா தோனி?

வெற்றிக் கேப்டன் தோனி, இந்திய அணிக்கு இந்த முறை கோப்பை பெற்றுத் தருவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் தோல்வியின் பிடியிலிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, மீட்டு இறுதியில் கோப்பை பெற்றுத் தந்துள்ளார்.

தற்போது இதே வேகத்துடன் கரீபிய மண்ணில் சாதிக்க களமிறங்குகிறார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சூப்பர் பார்மில் உள்ள இந்திய அணி, இந்த முறை உலககோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

அணி விபரம்:

தோனி (கேப்டன்), காம்பிர் (துணை கேப்டன்), முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன், ரவிந்திர ஜடேஜா, ஜாகிர் கான், பிரவீண் குமார், பியுஸ் சாவ்லா, யூசுப் பதான், ரோகித் சர்மா, யுவராஜ், தினேஷ் கார்த்திக், ஆஷிஸ் நெஹ்ரா, மற்றும் வினய் குமார்.

அணி அறிமுகம்
இந்தியா

மூன்றாவது ஐ.பி.எல்., தொடர் முடிந்து ஒருவாரம் கூட ஓய்வில்லாத நிலையில் இந்திய வீரர்கள் இன்னொரு அதிரடிக்கு கிளம்பியுள்ளனர். இது மூன்றாவது "டுவென்டி-20' உலக கோப்பை என்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரெய்னா, முரளி விஜய், காம்பிர் மற்றும் யுவராஜ், யூசுப் பதான்,ரோகித் சர்மா உள்ளிட்ட தோனியின் இந்திய அணி இம்முறை கோப்பை வெல்லுமா என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 2007ல் நடந்த முதலாவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் பைனலில், பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி,கோப்பை வென்று சாதித்தது. கபில்தேவுக்கு (1983, 60 ஓவர் போட்டி) பின் உலக கோப்பை பெற்று தந்த, முதல் கேப்டன் என்ற பெருமை தோனிக்கு கிடைத்தது.

இரண்டாவதாக இங்கிலாந்தில் நடந்த "டுவென்டி-20' <உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஏமாற்றியது. ஆனால் இம்முறை ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்க அணியுடன் பிரிவு "சி' யில் இடம் பெற்றுள்ள இந்திய அணி மீண்டும் சாதித்து காட்டவுள்ளது.

"சிக்சர் மன்னன்':

"டுவென்டி-20' உலக கோப்பை என்றவுடன், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 பந்திலும் 6 சிக்சர் அடித்த யுவராஜ் சிங் தான் நினைவுக்கு வருகிறார். ஆனால் கடந்த ஐ.பி.எல்., தொடர் இவருக்கு பெரும் சோதனையாக அமைந்தது. இந்த சோதனையை சாதனையாக மாற்றுவார் என நம்பலாம். தவிர, ரோகித் சர்மா, காம்பிர், இளம் ரவிந்திர ஜடேஜா பேட்டிங்கில் கைகொடுக்கலாம்.

ஜாகிர் பலம்:

கடந்த முறை இந்திய அணியின் பவுலிங் பெரும் ஏமாற்றம் அளித்தது. ஆனால் இம்முறை ஜாகிர் கான் முழு பலத்துடன் களமிறங்குகிறார். தவிர, பிரவீண் குமார், அனுபவ ஹர்பஜன், இளம் பியுஸ் சாவ்லா கைகொடுக்க உள்ளனர். கரீபிய மண் சுழலுக்கு ஆதரவளிக்கும் என தோனி எதிர்பார்ப்பதால், ஐ.பி.எல்., போல, 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

இவர்கள் தவிர, "பார்ட் டைம்' பவுலர்கள் ரெய்னா, யூசுப் பதான், யுவராஜ் போன்றவர்களும் சாதித்தால் வெற்றி கிடைக்கும்.

0 comments:

Post a Comment