டோனியின் தவறான முடிவுகள்

இந்திய அணி கேப்டன் டோனி தொடர்ந்து தவறான முடிவை எடுத்து வருவது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் “டாஸ்” வென்ற அவர் முதலில் பேட்டிங் செய்யாமல் பீல்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செய்த அதே தவறை மீண்டும் செய்தார்.

மேலும் அணியில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. கூடுதலாக ஒரு வேகப்பந்து வீரரை தேர்வு செய்து இருக்கலாம். வினய்குமாருக்கு வாய்ப்பு அளித்து இருக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா 2 ஓவரில் 36 ரன்களை வாரி கொடுத்தார்.

இதனால் அவரை நீக்கி விட்டு வினய்குமாருக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டோனி அவ்வாறு செய்யாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஜடேஜாவின் செயல்பாடு நேற்று மோசமாக இருந்தது. “பீல்டிங்” பவுலிங், பேட்டிங்கில் சொதப்பினார். சந்திராபால் அடித்த பந்தை “கேட்ச்” பிடிக்க தவறினார். 2 ஓவரில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

மிக சிறந்த கேப்டன் என்று பெயர் பெற்ற டோனி 20 ஓவர் உலக கோப்பையில் சரியாக கணிக்க தவறிவிட்டார்.

0 comments:

Post a Comment